கார்த்தி நடிக்கும் புதிய படம்.. தமிழக உரிமத்தை கைப்பற்றிய உதயநிதி ஸ்டாலின்! முழு விபரம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் கார்த்தி நடிக்கும் புதிய படத்தின் தமிழக உரிமையை உதயநிதியின் ரெட் ஜெயன்ட் நிறுவனம் கைப்பற்றி உள்ளது.

Advertising
>
Advertising

Also Read | பட ரிலீஸ்க்கு போட்டோ ஷூட்.. ரசிகர்களை கவர்ந்த பிரபல முன்னணி இளம் நடிகையின் வைரல் ஃ போட்டோஸ்

கார்த்தி நடித்து கடைசியாக வெளியான திரைப்படம் 'சுல்தான்'. இந்த படத்துக்குப் பிறகு இப்போது கார்த்தியின் கைவசம் பொன்னியின் செல்வன், விருமன், சர்தார் உள்ளிட்ட திரைப்படங்கள் உள்ளன.

இவை அடுத்தடுத்து இந்த ஆண்டுக்குள் ரிலீஸாகின்றன. இதில் பொன்னியின் செல்வன் மற்றும் விருமன் ஆகிய திரைப்படத்தின் படப்பிடிப்பு, ஏற்கனவே முடிவடைந்து விட்டன. இதன் பின் தயாரிப்பு பணிகளும் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. பொன்னியின் செல்வன் படம், செப்டம்பர் 30 அன்றும், விருமன் படம் ஆகஸ்ட் 31 அன்றும் ரிலீஸ் ஆகின்றன.

சர்தார் படத்தை இரும்புத்திரை, ஹீரோ படங்களை இயக்கிய இயக்குனர் மித்ரன் இயக்குகிறார். ஜார்ஜ் வில்லியம்ஸ் ISC ஒளிப்பதிவு செய்கிறார். இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.  ரூபன் படத்தொகுப்பு செய்ய, திலீப் சுப்பராயன் சண்டைபயிற்சி இயக்குனராக பணியாற்றுகிறார். கலை இயக்குனராக கதிர் பணியாற்றுகிறார். பிரின்ஸ் பிக்சர்ஸ் இந்த படத்தை தயாரிக்கிறது.

இந்த 'சர்தார்' படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ராஷி கண்ணாவும் ராஜிஷா விஜயனும் நடிக்கின்றனர்‌. இவர்களுடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை லைலா நடிக்கிறார். சர்தார் படத்தின் சேட்டிலைட் டிவி ஒளிபரப்பு உரிமத்தை பிரபல தொலைக்காட்சி சேனலான கலைஞர் டிவி கைப்பற்றி உள்ளது.

இப்படம் வருகிற தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் நிறுவனம்  கைப்பற்றி உள்ளது. இதனை அதிகாரப்பூர்வமாக அந்நிறுவனம் தனது டிவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது.

Also Read | அள்ளுதே! வானவில்லை மையமாக வைத்து மீரா ஜாஸ்மீன் போட்டோஷூட்.. வைரலாகும் HOT போட்டோஸ்!

தொடர்புடைய இணைப்புகள்

Sardar movie tamilnadu theatrical rights bagged by Udhayanidhi Stalin

People looking for online information on Karthi, Sardar, Sardar movie tamilnadu theatrical rights, Udhayanidhi Stalin will find this news story useful.