கார்த்தி நடிக்கும் மாஸான புதிய படம்.. சேட்டிலைட் TV உரிமையை கைப்பற்றிய முன்னணி சேனல்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் கார்த்தி நடிக்கும் புதிய படத்தின் சேட்டிலைட் TV உரிமத்தை பிரபல தொலைக்காட்சி கைப்பற்றி உள்ளது.

Advertising
>
Advertising

Also Read | நடிகர் ஷாருக்கான் மகளின் பிறந்தநாள்.. வெளியான பெர்த் டே பார்ட்டி வைரல் PHOTOS!

கார்த்தி நடித்து கடைசியாக வெளியான திரைப்படம் 'சுல்தான்'. இந்த படத்துக்குப் பிறகு இப்போது கார்த்தியின் கைவசம் பொன்னியின் செல்வன், விருமன், சர்தார் உள்ளிட்ட திரைப்படங்கள் உள்ளன.

இவை அடுத்தடுத்து இந்த ஆண்டுக்குள் ரிலீஸாகின்றன. இதில் பொன்னியின் செல்வன் மற்றும் விருமன் ஆகிய திரைப்படத்தின் படப்பிடிப்பு, ஏற்கனவே முடிவடைந்து விட்டன. இதன் பின் தயாரிப்பு பணிகளும் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. பொன்னியின் செல்வன் படம், செப்டம்பர் 30 அன்றும், விருமன் படம் ஆகஸ்ட் 31 அன்றும் ரிலீஸ் ஆகின்றன.

சர்தார் படத்தின் ஆரம்ப படப்பிடிப்பு சென்னையில் சில மாதங்களுக்கு முன்பு தொடங்கியது. பின்னர் கொரோணா காரணமாக படப்பிடிப்பு ஒத்தி வைக்கப்பட்டது. இதற்கிடையில்  தான் பொன்னியின் செல்வன், விருமன் படப்பிடிப்பில் கார்த்தி கலந்து கொண்டார். பின்னர் மீண்டும் சில தினங்களுக்கு முன்பு சென்னையில் இந்த படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கி நடைபெற்றது.  மைசூரில் நடன காட்சியுடன் ராஸி கண்ணா - கார்த்தி சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டன.

இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ராஷி கண்ணாவும் ராஜிஷா விஜயனும் நடிக்கின்றனர்‌. இவர்களுடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை லைலா நடிக்கிறார்.

இந்நிலையில் சர்தார் படத்தின் சேட்டிலைட் டிவி ஒளிபரப்பு உரிமத்தை பிரபல தொலைக்காட்சி சேனலான கலைஞர் டிவி கைப்பற்றி உள்ளது. இதனை இரண்டாவது லுக் போஸ்டர் மூலம் படக்குழு அறிவித்துள்ளது.

சர்தார் படத்துக்கு பின் நடிகர் கார்த்தி, இயக்குனர் ராஜூமுருகனுடன் தனது 24வது படத்தில் நடிக்க உள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த படத்தில் பொன்னியின் செல்வனுக்குப் பிறகு கார்த்தி நடிக்க ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் ISC ஒளிப்பதிவு செய்ய உள்ளார். இந்த படத்தை ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது.

Also Read | கார்த்தி நடிக்கும் 'சர்தார்' படம் எப்போ ரிலீஸ்? வெளியான சரவெடி அப்டேட்

தொடர்புடைய இணைப்புகள்

Sardar movie satellite TV Rights Bagged by Kalaignar TV

People looking for online information on Kalaignar TV, Karthi, Sardar movie, Sardar Movie Release Updates, Sardar movie satellite TV Rights will find this news story useful.