கார்த்தி நடித்த 'சர்தார்' படத்தின் வசூல் நிலவரம்.. நடிகை ரஜிஷா விஜயன் பகிர்ந்த சூப்பர் தகவல்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் கார்த்தி நடிப்பில் வெளிவந்த சர்தார் படத்தின் வசூல் நிலவரம் குறித்த தகவலை நடிகை ரஜிஷா விஜயன் வெளியிட்டுள்ளார்.

Advertising
>
Advertising

Also Read | 'தங்கலான்' கெட்டப்பில் சீயான் விக்ரம் போட்டோ ஷூட்.. ரசிகர்களை கவரும் மெர்சலான ஃபோட்டோஸ்!

நடிகர் கார்த்தியின் 22வது படமான 'சர்தார்' படம் தீபாவளியை முன்னிட்டு  அக்டோபர் 21 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

இந்தப் படத்தை இரும்புத்திரை, ஹீரோ படங்களை இயக்கிய இயக்குனர் மித்ரன் இயக்கினார். ஒளிப்பதிவாளர் ஜார்ஜ் வில்லியம்ஸ் ISC ஒளிப்பதிவு செய்துள்ளார். இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். பிரின்ஸ் பிக்சர்ஸ் இந்த படத்தை தயாரித்தது.

இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ராஷி கண்ணாவும் ரஜிஷா விஜயனும் நடித்தனர். நடிகை லைலா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

  இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றி திரையரங்குகளில் ரிலீஸ் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.  இந்த படம் மூன்றாவது வாரத்தை வெற்றிகரமாக எட்டியுள்ளது. முதல் வாரத்தில் 380 திரைகளில் வெளியான இந்த படம், இரண்டாவது வாரத்தில் 500 திரைகளில் வெற்றிகரமாக ஓடியது.

மேலும்  படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் P.S.மித்ரனுக்கு   தயாரிப்பாளர் பிரின்ஸ் பிக்சர்ஸ்  S.லக்ஷ்மன்குமார் டொயோட்டடா ஃபார்ச்சூனர் கார் ஒன்றை பரிசளித்தார். நடிகர் கார்த்தி இந்த பரிசினை இயக்குனருக்கு வழங்கினார்.

பரிசாக பெற்ற காரில் இயக்குனர் மித்ரன் & கார்த்தி பயணம் செய்த வீடியோ காட்சிகள்  வெளியாகி வைரலாகியது குறிப்பிடத்தக்கது.  சர்தாரின் வெற்றியை தொடர்ந்து சர்தார் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளதாக, அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நடிகை ரஜிஷா விஜயன், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சர்தார் திரைப்படம் உலகளவில் 100 கோடி ரூபாய் வசூலை கடந்து விட்டதாக குறிப்பிடும் போஸ்டரை பகிர்ந்து ரசிகர்களுக்கு நன்றி கூறியுள்ளார்.

 

Also Read | காஜல் அகர்வால் குழந்தையுடன் விளையாடும் செல்ல நாய்க்குட்டி.. செம்ம CUTE போட்டோஸ்!

தொடர்புடைய இணைப்புகள்

Sardar Movie Box Office Collection Rajisha Vijayan Instagram Post

People looking for online information on Karthi, Rajisha Vijayan, Sardar, Sardar Movie Box Office Collection will find this news story useful.