ஆர்யா நடிப்பில், பா. ரஞ்சித் இயக்கத்தில் ஜூலை 22ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியான சார்பட்டா பரம்பரை திரைப்படம் ரசிகர்கள் மத்தியிலும் விமர்சகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்று பாராட்டுகளை குவித்து வருகிறது.
1970 காலகட்டத்தில் வட சென்னையில் நடைபெறும் குத்துச்சண்டை பின்னணி சம்பவங்களின் தொகுப்பாக 'சார்பட்டா பரம்பரை' திரைப்படம் உருவாகி உள்ளது.
இந்த படத்தை ரசிகர்கள் மட்டுமல்லாது திரையுலக பிரமுகர்களும் பார்த்துவிட்டு தங்களது பாராட்டுக்களை குவித்து வண்ணம் உள்ளனர்.
'வெண்ணில கபடி குழு', 'ஜீவா' போன்ற விளையாட்டை மையமாக வைத்து திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் சுசீந்திரன், 'சார்பட்டா பரம்பரை' படத்தை பார்த்துவிட்டு தனது டிவிட்டரில் கீழ்க்கண்டவாறு எழுதியுள்ளார், " இன்று வெளியாகியிருக்கும் 'சார்பட்டா பரம்பரை' திரைப்படத்தை பார்த்தேன். இப்படி ஒரு திரைப்படத்தை திரையரங்கில் காண முடியவில்லை என்று வருத்தமாக இருக்கிறது. நண்பர் ரஞ்சித் திரைப்படங்களில் இதுவே முதன்மையான சிறந்த திரைப்படம். இந்திய சினிமாவிற்கு மிகச் சிறந்த திரைப்படத்தை தந்துள்ள ரஞ்சித்துக்கு என் அன்பான வாழ்த்துகள். கலை இயக்குனர் ராமலிங்கம் மற்றும் ஒளிப்பதிவாளர் முரளி இருவருக்கும் பல விருதுகள் காத்துக்கொண்டிருக்கின்றன. இப்படத்திற்காக ஆர்யாவின் நீண்ட காத்திருப்புக்கும் உழைப்பிற்கும் எனது சல்யூட், கலையரசன், துஷாரா விஜயன், முத்துக்குமார், பசுபதி ஆகியோர் நடிப்பு சிறப்பு வாழ்த்துகள்!" என கூறியுள்ளார்.