விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மதுர தொடரின் மூலம் பிரபலமான ரீல்ஸ் ஜோடியாக அறியப்பட்டவர்கள் செந்தில் மற்றும் ஸ்ரீஜா.

Also Read | “பெண்களை அப்படி காட்டுறோமா?.. சீரியலை நிறுத்த சொல்லிட்டாங்க!” ─ ‘எதிர்நீச்சல்’ இயக்குநர் Exclusive
மிர்ச்சி செந்தில் என அழைக்கப்படும் செந்தில் ரேடியோ ஜாக்கியாகவும் புகழ்பெற்றவர். இவர் ஸ்ரீஜாவுடன் இணைந்து நடித்த மதுர தொடருக்கு கிடைத்த வெற்றியை தொடர்ந்து, 2011ம் ஆண்டு சரவணன் மீனாட்சி தொடரில் ஹீரோ - ஹீரோயினாக இணைந்து நடித்தனர். இதன் மூலம் அனைவருக்கும் பிடித்தமான ஜோடியாக இவர்களும் மாறினர்.
சரவணன் மீனாட்சி தொடரின் முதல் சீசனான இவர்கள் நடித்த இந்த சீசனில் இடம்பெற்ற 'ஏலோ' என தொடங்கும் ஹம்மிங் பலருக்கும் அந்த சமயத்தில் மொபைல் ரிங்டோனாக இடம்பெற்றிருந்தது. இதில் செந்தில் - ஸ்ரீஜாவின் கெமிஸ்ட்ரி பலருக்கும் பிடித்துப்போக, ரசிகர்கள் எதிர்பார்த்தபடியே இருவரும் ஒருவரையொருவர் காதலித்து வந்ததாக செய்திகள் வெளியாகின.
இதனை அடுத்து இந்த ஜோடி, கடந்த 2014ம் ஆண்டு மணம் செய்துகொண்டனர். பின்னர் மீண்டும் சில வருடம் கழித்து இந்த ஜோடி விஜய் தொலைக்காட்சியில் 'மாப்பிள்ளை' தொடரில் நடித்தனர். இதனிடையே திருமணமாகி 8 வருடங்களுக்கு பிறகு ஸ்ரீஜா கர்ப்பமாக இருப்பதாக அவரது வளைகாப்பு புகைப்படத்தை மகிழ்ச்சியுடன் சமூக வலைதளத்தில் வெளியிட்டிருந்தார் செந்தில்.
இந்நிலையில் நடிகர் செந்தில் - நடிகை ஸ்ரீஜா தம்பதியருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக செந்தில் தகவல் வெளியிட்டுள்ளார். இது தொடர்பான தமது பதிவில், “பெற்றோர்களாக பிறந்திருக்கிறோம் எங்கள் மகனால்” என செந்தில் பகிர்ந்ததை அடுத்து ரசிகர்கள் இவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
Also Read | போடு! நம்ம பாக்கியலட்சுமி எழில்.. சைலண்ட்டா நடிச்ச ரொமாண்டிக் வீடியோ.. வெளியான டீசர்..!