"இந்த முறை நான் அடிக்கிற அடி.." பட்டையை கிளப்பும் THE LEGEND படத்தின் மாஸ் டிரைலர்.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

"தி லெஜண்ட்" படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ள நிலையில், மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

Advertising
>
Advertising

சரவணா ஸ்டோர்ஸின் விளம்பரப் படங்கள் மூலம் தமிழக மக்களிடையே பிரபலம் அடைந்தவர் அந்த கடைகளின் அதிபர் அருள் சரவணன்.

இதனைத் தொடர்ந்து, அவர் கதாநாயகனாக அவதாரம் எடுத்துள்ள திரைப்படம் தான் தி லெஜண்ட். உல்லாசம், விசில் ஆகிய திரைப்படங்களையும், நூற்றுக் கணக்கான விளம்பர படங்களையும் இயக்கி உள்ள ஜேடி - ஜெர்ரி தான், இந்த படத்தை இயக்கி உள்ளனர்.

நட்சத்திர பட்டாளம்

பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுத்தலா தி லெஜண்ட் திரைப்படத்தின் வாயிலாக, தமிழில் அறிமுகமாகிறார். அதே போல, மறைந்த ஜனரஞ்சக கலைஞன் என அனைவராலும் பாராட்டப்பட்ட விவேக் கடைசியாக நடித்த படமும் தி லெஜண்ட் தான். இவர்களுடன் கீத்திகா, யோகிபாபு, விஜயகுமார், பிரபு, நாசர், சுமன், தம்பி ராமையா, ரோபோ சங்கர், மயில்சாமி, ஹரிஷ் பெரேடி, முனீஷ்காந்த், மன்சூர் அலிகான் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

ஹிட்டடித்த பாடல்கள்

தி லெஜண்ட் படத்தின் ஒளிப்பதிவு பணிகளை ஆர் வேல்ராஜ் மேற்கொண்டுள்ளார். ரூபன் எடிட் செய்கிறார். கலை அமைப்பு பணிகளை எஸ் எஸ் மூர்த்தி கவனிக்கிறார். பட்டுக்கோட்டை பிரபாகர் வசனம் எழுதியுள்ளார். ராஜு சுந்தரம், பிருந்தா, தினேஷ் ஆகியோர் நடன பணிகளை மேற்கொள்கிறார்கள். வைரமுத்து, கபிலன், பா விஜய், சினேகன், கார்க்கி ஆகியோர் பாடல் வரிகளை எழுதியுள்ளார்கள்.

இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிந்து ரிலீஸ் வேலைகள் தொடங்கியுள்ளன. அதன்படி, படத்தின் முன்னோட்டமாக சில போஸ்டர்களும் மோஷன் போஸ்டர்களும் ரிலீஸாகி கவனத்தை ஈர்த்தன. இதன் பின்னர், மொசலோ மொசலு மற்றும் வாடிவாசல் ஆகிய இரண்டு பாடல்களும் வெளியாகி, மக்கள் மத்தியில் அதிகம் வைரலாகி இருந்தது.

தி லெஜண்ட் டிரைலர்

இதனைத் தொடர்ந்து, இப்படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா, இன்று (29.05.2022), சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தி லெஜண்ட் படத்தின் டிரைலர், தற்போது வெளியிடப்பட்டுள்ளது. விளம்பர படங்களில் மட்டுமே நாம் அதிகம் பார்த்துள்ள லெஜண்ட் சரவணன், படத்தின் டிரைலரில் ஆக்ஷன், ரொமான்ஸ், டான்ஸ் என அனைத்து ஏரியாக்களிலும் பட்டையைக் கிளப்பி உள்ளார்.
 

 

மக்கள் மத்தியில், தி லெஜண்ட் ட்ரைலர் நல்ல வரவேற்பை பெற்று வருவதால், படத்தின் ரீலீஸையும் அவர்கள் எதிர்பார்த்து காத்து வருகின்றனர்.

தொடர்புடைய இணைப்புகள்

Saravanan arul movie the legend trailer released

People looking for online information on Harris Jayaraj, Legend Saravanan, The Legend movie, The Legend Trailer, Urvashi Rautela, Vivekh will find this news story useful.