‘தாமரை உங்களுக்கு தனி வணக்கமே சொல்லணும்!’..யாரு #BIGGBOSS.. யாரு சரத்குமார்னே தெரில!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

BiggBossTamil5: பிக்பாஸ் வீட்டுக்குள் நடிகர் சரத்குமார் வருகை தந்தார்.  முன்னதாக சரத்குமார் வருவார் என்று தெரியாது எனினும், யாரோ வரப்போகிறார்கள் என்கிற பரபரப்பில் போட்டியாளர்கள் தயாராகிக் கொண்டிருந்தனர். 

Sarathkumar Special vanakkam to thamarai selvi biggboss5
Advertising
>
Advertising

சரத்குமார் entry

அப்போது வீட்டுக்குள் வந்த சரத்குமார், அனைவருக்கும் வணக்கம் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்கள் சொல்லி, நலம் விசாரித்துக் கொண்டிருந்தார். அப்போது தாமரை தூரத்தில் இருந்து கடைசியாக ஓடிவர, அவரை பார்த்த சரத்குமார் “தாமரை உங்களுக்கு தனியா சொல்லணும்.. வணக்கம்! ஏன் இவ்வளவு நேரம் தாமரை? குளத்துல இருந்து வர்றீங்களா? நீங்க சகிப்பு தன்மையுடன் இருக்கீங்க. எல்லாத்தையும் புரிஞ்சுக்கிறீங்க. ” என்று புகழாரம் சூட்டினார்.

Sarathkumar Special vanakkam to thamarai selvi biggboss5

தாமரை - பிரியங்கா போட்டி

அதன் பின்னர் தாமரை மற்றும் பிரியங்கா இருவருக்கும் கை பலத்தை காட்டும் ஒரு பலப்பரீட்சை வைத்தார் சரத்குமார். இதில் தாமரை வெற்றி பெற்றார்.  அப்போது பேசிய சரத்குமார், ‘இந்த வீட்டில் இந்த கேமை விளையாட, மெண்டல் ஃபிட்னஸ் மற்றும் பிசிக்கல் ஃபிட்னஸ் இரண்டுமே முக்கியம்’ என குறிப்பிட்டார்.

சிபி, அமீர் உள்ளிட்டோருக்கு புஷ்-அப் செய்யும் போட்டி

அதன் பின்னர் சிபி, அமீர் உள்ளிட்டோருக்கு புஷ்-அப் செய்யும் போட்டி வைத்தார். சிறிது நேரத்தில் ஒரு குட்டி பிரேக் விட்ட சரத்குமார் ஒரு பெட்டியுடன் வந்து நின்று, அதில் இருக்கும் 3 லட்ச ரூபாயை எடுத்துக்கொண்டு இப்போதே வெளியேறுபவர்கள் வெளியேறலாம் என கூறினார். அதில், ‘நான் டிமோட்டிவேட் செய்யவில்லை. யாரேனும் ஒருவர் தான் வெற்றிபெற முடியும். உங்கள் முடிவு எதையும் நான் சரி அல்லது தவறு என சொல்லமாட்டேன். நீங்கள் முடிவெடுங்கள்’ என கூறினார்.

யாரு BiggBoss.. யாரு சரத்குமார்னே தெரியல!

அப்போது பிக்பாஸ் சரத்குமாரிடம் பேச, பதிலுக்கு சரத்குமாரும் பிக்பாஸிடம் பேசினார். இதை பார்த்த ரசிகர்கள், இருவரும் கனீர் குரலாலும், கறாரான பேச்சுமொழியாலும் கம்பீரம் காட்டுகிறார்களே? இதுல யார் பிக்பாஸ் யார் சரத்குமார் என்றே தெரியவில்லை என கூறிவருகின்றனர். 

Also Read: வீல் சேர்-ல ஏன் வர்றீங்க? DD-க்கு என்ன ஆச்சு? - அவரே சொன்ன காரணம்! அதிர்ந்த ரசிகர்கள்! வீடியோ

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Sarathkumar Special vanakkam to thamarai selvi biggboss5

People looking for online information on BiggBoss5, BiggBossTamil5, Sarathkumar biggboss entry will find this news story useful.