தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக கலக்கி வந்தவர் நடிகர் சரத்குமார்.
Also Read | கோவாவில் சுற்றுப்பயணம்..கிளாமர் லுக்கில் அசத்தும் '96' பட நடிகை கௌரி கிஷன்!
இவர் நடித்த சூர்யவம்சம், நாட்டாமை, நட்புக்காக உள்ளிட்ட படங்கள் எவர்க்ரீன் க்ளாசிக் படங்களாக கொண்டாடப்படுகின்றன
அண்மையில் இவர் வானம் கொட்டட்டும், பொன்னியின் செல்வன் ஆகிய படங்களில் நடித்தார். பொன்னியின் செல்வன் படத்தில் சரத்குமார் பெரிய பழுவேட்டரையராக நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.
தற்போது வாரிசு, தி ஸ்மைல் மேன், பரம்பொருள் & நிறங்கள் மூன்று ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவராகவும், பொறுப்புகளைக் கொண்டிருக்கும் சரத்குமார் நடிகர் சங்கத்தில் முக்கிய பங்காற்றி இருக்கிறார். மேலும் தென்காசி தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தவர்.
இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகர் சரத்குமார் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார். அதில், " இன்று காலை, K.S.ரவிக்குமார் தயாரிப்பில் உருவாகிவரும் #HitList திரைப்படத்தின் படப்பிடிப்பிற்கு செல்கின்ற வழியில், நந்தம்பாக்கம், TradeCentre அருகில் உள்ள அடையாறு ஆனந்த பவன் (A2B) உணவகத்தில் சிற்றுண்டி அருந்திய போது அங்கு பணியாற்றும் சகோதர, சகோதரிகளை சந்தித்து உரையாடி மகிழ்ந்தேன்" என பதிவிட்டுள்ளார்.
இந்த வீடியோவில் சூர்யவம்சம் படத்தின் பின்னணி இசை ஒலிக்க உணவக ஊழியர்களை பாராட்டுவதும் இடம் பெற்றுள்ளது.
Also Read | அருள்நிதி நடிப்பில் டிமான்ட்டி காலனி - 2.. அஜய் ஞானமுத்து வெளியிட்ட டைட்டில் லுக் போஸ்டர்!