தளபதி விஜய்யின் ‘துப்பாக்கி 2’-க்காக I'M WAITING.. சொல்லும் பிரபலம்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் விஜய் நடிப்பில் உருவான ‘பிகில்’ திரைப்படம் ரசிகர்களின் உச்சக்கட்ட எதிர்ப்பார்ப்புக்கு மத்தியில் இன்று உலகம் முழுவதும் ரிலீசானது.

ஏஜிஎஸ் எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் பிரம்மாண்ட பொருட் செலவில் சுமார் ரூ.180 கோடி பட்ஜெட்டில் அட்லி இயக்கியுள்ள திரைப்படம் ‘பிகில்’. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார்.

மேலும், கதிர், யோகிபாபு, விவேக், ரெபா மோனிகா, இந்துஜா, டேனியல் பாலாஜி, ஆனந்தராஜ், சவுந்தரராஜா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இப்படத்திற்கு ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

முதன்முறையாக ‘பிகில்’ திரைப்படத்தில் அப்பா-மகன் என இரட்டை வேடங்களில் நடிகர் விஜய் நடித்துள்ள இப்படத்தை தளபதி ரசிகர்கள் ஆங்காங்கே பட்டாசு வெடித்து ‘பிகில்’ அடித்து தீபாவளி கொண்டாட்டத்தை பிகில் திரைப்படத்துடன் தொடங்கியுள்ளனர்.

இதனிடையே, பிரபல ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘பிகில்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் பேசிய வீடியோவை பகிர்ந்து, அருமையான பேச்சு விஜய் சார். அடுத்தது ‘துப்பாக்கி 2’-க்காக காத்திருக்கிறேன் என ட்வீட் செய்துள்ளார்.

தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘தர்பார்’ திரைப்படத்தில் பணியாற்றியுள்ளார். இப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியாகவுள்ளது.

Santosh Sivan on Vijay's bigil Speech and waiting for Thuppakki 2

People looking for online information on Bigil, Santhosh Sivan, Thuppakki 2, Vijay will find this news story useful.