இயக்குனர் பா.ரஞ்சித்துக்கு பிடித்த உணவு.. சமைத்து கொடுத்த பிரபல நடிகர்.. வைரல் வீடியோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பா. ரஞ்சித்துக்கு பிடித்த பீப் பிரியாணியை ஸ்பெஷலாக பிரபல நடிகர் சமைத்து கொடுத்துள்ளார்.

Advertising
>
Advertising

Also Read | 'நானே வருவேன்' படத்தின் டீஸர் ரிலீஸ் எப்போ? புதிய போஸ்டரில் சர்ப்ரைஸ் கொடுத்த படக்குழு!

தமிழ் சினிமாவின் மிக முக்கிய இயக்குனர்களில் ஒருவர் பா.ரஞ்சித். தமிழ் சினிமாவின் திசைவழிப்போக்கை மாற்றிய இயக்குனர்களின் பெயர்களை பட்டியலிட்டால் இவரின் பெயரை எவராலும் தவிர்க்க முடியாது.

இயக்குனர் வெங்கட்பிரபுவிடம் உதவி இயக்குனராக இருந்து “அட்டக்கத்தி” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி, “மெட்ராஸ்” திரைப்படம் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருந்தார் இயக்குனர் பா.ரஞ்சித். “மெட்ராஸ்” படத்தை தொடர்ந்து சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து தொடர்ச்சியாக கபாலி, காலா என இரண்டு படங்களை கொடுத்து இருந்தார். இதில் கபாலி திரைப்படம் மிகப்பெரிய அளவில் வசூலை வாரிக்குவித்தது.

இதற்கிடையே நீலம் புரொடக்சன்ஸ் எனும் பெயரில் தயாரிப்பு நிறுவனம் தொடங்கி பல குறும்படங்களையும், “பரியேறும் பெருமாள்”, “இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு”, சென்ற ஆண்டு கிறிஸ்துமசை முன்னிட்டு வெளியான 'ரைட்டர்' போன்ற படங்களையும் தயாரித்துள்ளார்.

'சார்பட்டா பரம்பரை' படத்தை தொடர்ந்து பா. ரஞ்சித்  “நட்சத்திரம் நகர்கிறது”  படத்தை  இயக்கினார். இந்த படத்தில்  காளிதாஸ் ஜெயராம், கலையரசன், துஷரா விஜயன் முக்கிய வேடத்தில் நடித்தனர். இந்த படம் கடந்த ஆகஸ்ட் மாதம் 31 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

இந்நிலையில் நமது பிஹைண்ட்வுட்ஸ் சேனலுக்கு பிரத்யேகமான Fans Festival நிகழ்ச்சியில் இயக்குனர் பா. ரஞ்சித் கலந்து கொண்டார். அந்நிகழ்வில் இயக்குனர் பா. ரஞ்சித்தின் விருப்ப உணவான பீப் பிரியாணியை ஸ்பெஷலாக சமைத்து ரஞ்சித்துக்கு சர்ப்ரைஸாக நடிகர் சந்தோஷ் பிரதாப் சாப்பிட சமைத்து கொடுத்துள்ளார்.

'சார்பட்டா பரம்பரை' படத்தின் டப்பிங் பணிகளின் போது பீப் உணவை, ரஞ்சித் விரும்பி உண்பதை பார்த்துள்ளதாகவும் சந்தோஷ் பிரதாப் வீடியோவில் கூறியுள்ளார்.

நடிகர் ஆர்யாவை வைத்து ரஞ்சித் இயக்கிய “சார்பட்டா பரம்பரை” திரைப்படம் கடந்தாண்டு ஜூலை 22ம் தேதி அமேசான் பிரைமில் வெளியானது. இந்த படத்தில் சந்தோஷ் பிரதாப் 'ராமன்' எனும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

சந்தோஷ் பிரதாப், குக் வித் கோமாளி சீசன் 3யில் போட்டியாளராக கலந்து கொண்டதும் குறிப்பிடத்தக்கது.

Also Read | பிரபல OTT-யில் ரிலீஸாகும் புதிய படத்துக்கு கைத்தறி Graffiti உடையில் தமன்னா போட்டோஷூட்!

இயக்குனர் பா.ரஞ்சித்துக்கு பிடித்த உணவு.. சமைத்து கொடுத்த பிரபல நடிகர்.. வைரல் வீடியோ! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Santhosh Prathap Beef Biriyani Dish for Director Pa Ranjith

People looking for online information on Pa Ranjith, Santhosh Prathap, Santhosh Prathap Beef Biriyani Dish will find this news story useful.