டைம் மிஷின்... மூன்று கெட்டப்புகளில் சந்தானம் - 'டிக்கிலோனா' படத்தின் செம காமெடி டிரெய்லர் இதோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் சந்தானம் 3 வித கெட்டப்புகளில் நடித்துள்ள படம் 'டிக்கிலோனா'. இந்த படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. டிரெய்லரை அடிப்படையாக வைத்து பார்க்கும் போது இது டைம் மிஷினை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள படம் என்று தெரிகிறது.

Santhanam, Yogi Babu, Harbhajan Singh's Dikkiloona trailer is here | சந்தானம், யோகி பாபு, ஹர்பஜன் சிங்கின் டிக்கிலோனா டிரெய்லர் இதோ

டிரெய்லரில் 2027ல் இருந்து 2020 ஆம் ஆண்டுக்கு அவரது கல்யாணத்தை தடுத்து நிறுத்த செல்வதாக கூறப்படுகிறது. டிரெய்லரின் பின்னணியில் இளையராஜா இசையில் கமல்ஹாசனின் மைக்கேல் மதன காமராஜன் படத்தில் இடம் பெற்ற பேர் வச்சாலும் பாடலின் இசை ஒலிக்கிறது. டிரெய்லரின் இறுதியில் சந்தானம் மூன்று கெட்டப்புகளில் ஒரே காட்சியில் தோன்றுவது போல் காட்டப்பட்டுள்ளது.

Santhanam, Yogi Babu, Harbhajan Singh's Dikkiloona trailer is here | சந்தானம், யோகி பாபு, ஹர்பஜன் சிங்கின் டிக்கிலோனா டிரெய்லர் இதோ

படத்தில் மூன்று சந்தானமா ? அல்லது ஒரே சந்தானம் வெவ்வேறு காலக்கட்டங்களில் இருக்கும் சந்தானம் ஒரே காலகட்டத்துக்கு வந்து சந்திக்கிறார்களா என்று தெரியவில்லை. ஏனெனில் 3 சந்தானத்தின் பெயரும் மணி என்று கூறுகிறார்கள்.

இந்த படத்தில் ஹர்பஜன் சிங், யோகிபாபு, அனகா, ஷிரின், ஆனந்தராஜ், முனிஷ்காந்த், ஷாரா என ஒரு பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். இந்த படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, அர்வி ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தை கேஜேஆர் ஸ்டுயோஸ் மற்றும் சோல்ஜர் ஃபேக்டரி நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.

டைம் மிஷின்... மூன்று கெட்டப்புகளில் சந்தானம் - 'டிக்கிலோனா' படத்தின் செம காமெடி டிரெய்லர் இதோ வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Santhanam, Yogi Babu, Harbhajan Singh's Dikkiloona trailer is here | சந்தானம், யோகி பாபு, ஹர்பஜன் சிங்கின் டிக்கிலோனா டிரெய்லர் இதோ

People looking for online information on Dikkiloona, Harbhajan Singh, Santhanam, Yogi Babu will find this news story useful.