VIDEO: 'அடுத்து பிஎம்டபுள்யூ வாங்கணும்'.. புகழ்-க்கு சந்தானம் கொடுத்த சர்ப்ரைஸ் கிஃப்ட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

அது இது எது மற்றும் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சிகள் மூலம் புகழ் பெற்றவர் விஜய் டிவி நட்சத்திரம் புகழ்.

தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலமாக மக்களின் ஏகோபித்த அபிமானத்தை பெற்ற புகழுக்கு ரசிகர்கள் பட்டாள ஏராளம். மிகவும் கஷ்டப்பட்ட புகழ் ஆரம்பத்தில் கார் ஷோ ரூமில் காரை சுத்தம் செய்யும் பணியில் ஈடுப்பட்டிருந்தார்.

இந்நிலையில் தற்போது தன்னுடைய விடா முயற்சியால் பல்வேறு உயரங்களை எட்டி வரும் புகழ் சொந்தமாக புதிய கார் ஒன்றை வாங்கியுள்ளார். இதுபற்றி தன்னுடைய ரசிகர்களிடையே பகிர்ந்த புகழ், தன் குடும்பத்தில் தான் தான் முதன் முதலில் கார் வாங்கியதாகவும், அனைவராலும் சாதிக்க முடியும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் தனது காரை நடிகர் சந்தானத்திடம் காண்பித்த வாழ்த்து பெற்ற புகழுக்கு, சந்தானம் புகழின் கார் முன்பாக ஒட்டி வைத்துக்கொள்ள ஒரு வெள்ளி விநாயகரை பரிசாக அளிக்கும் வீடியோவை புகழ் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில், “இன்னும் பி.எம்.டபுள்யு, ஆடி கார் வாங்கினாலும் நான் இப்படி உனக்கு கிஃப்ட் தரணும் ஓகே?” என்று வாழ்த்துகிறார்.

ALSO READ: வீடியோவுடன் வெளியான 'எஞ்சாயி எஞ்சாமி' பாடல்.. 'ரௌடி பேபி' தீ குரலில் வைரலாகும் வீடியோ!

தொடர்புடைய இணைப்புகள்

Santhanam Suprise gift to pugazh விஜய் டிவி புகழ் சந்தானம்

People looking for online information on Pugazh, Santhanam, Trending, VideoViral, Vijay Tv Pugazh will find this news story useful.