சந்தானம் - குக் வித் கோமாளி புகழ் நடிக்கும் "சபாபதி" படத்தின் டிரெய்லர் ரிலீஸ் எப்போ தெரியுமா?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நாயகனாக தொடர்ந்து ஹிட் படங்களை வழங்கி முத்திரை பதித்து வரும் சந்தானம் நடிப்பில் காமெடி-குடும்ப சென்டிமென்ட் கலந்து உருவாகியுள்ள ‘சபாபதி’  திரைப்படத்தை ஆர் கே என்டர்டெயின்மென்ட் சார்பில் சி ரமேஷ் குமார் தயாரிக்க, ஆர் ஸ்ரீநிவாச ராவ் இயக்கியுள்ளார்.

santhanam starring Sabhaapathy movie trailer on this date
Advertising
>
Advertising

திக்கு வாயால் அவதிப்படும் வாலிபர் கதாபாத்திரத்தில் முதல் முறையாக இப்படத்தில் சந்தானம் நடித்துள்ளார். நகைச்சுவை நிறைந்த இந்த திரைப்படத்தில் தந்தை-மகனுக்கிடையேயான உறவு குறித்து அழகாக காட்டப்பட்டுள்ளது. சந்தானத்தின் நடிப்பு மிகவும் பேசப்படும் என்று படக்குழுவினர் தெரிவிக்கிறார்கள்.

santhanam starring Sabhaapathy movie trailer on this date

சாம் சி எஸ் இசையில் உருவாகியுள்ள  ‘சபாபதி’-யின் சண்டைக் காட்சிகளை ஹரி தினேஷ் வடிவமைத்துள்ளார். எம் எஸ் பாஸ்கர், பிரீதி வர்மா, சாயாஜி ஷிண்டே, ‘விஜய் டிவி’ புகழ், சுவாமிநாதன், ‘காமெடி பஜார்’ மாறன் உள்ளிட்டோர் ‘சபாபதி’ படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஒளிப்பதிவை பாஸ்கர் ஆறுமுகம் கவனிக்க, படத்தொகுப்பை லியோ ஜான் பால் கையாண்டுள்ளார்.

இந்நிலையில் இந்த படத்தின் டிரெய்லர் வரும் நவம்பர் 10 அன்று வெளியாக உள்ளது, இதனை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. முன்னதாக 'பிஸ்கோத்' படத்தில் நடித்த சந்தானம் அந்த படத்தைத் தொடர்ந்து 'டிக்கிலோனா', 'பாரிஸ் ஜெயராஜ்' படங்களில் நடித்தார். இதில் பாரிஸ் ஜெயராஜ் திரைப்படம் திரையரங்கில் நேரடியாக வெளியானது. டிக்கிலோனா திரைப்படம் ஒடிடியில் வெளியானது. 

சபாபதி படம் திரையரங்குகளில் நவம்பர் மாதம் வெளியாகவுள்ள இத்திரைப்படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை கலர்ஸ் டிவி வாங்கியுள்ளது.

 

தொடர்புடைய இணைப்புகள்

Santhanam starring Sabhaapathy movie trailer on this date

People looking for online information on Sabapathy, Santhanam will find this news story useful.