VIDEO: "உதயநிதி ஸ்டாலின் உள்ள ஒரு டைரக்டர் இருக்காப்ள"... சந்தானம் சொன்ன சூப்பர் சம்பவம்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சர்க்கிள் பாக்ஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் ராஜ் நாராயணன் தயாரிப்பில், ’மேயாத மான் ’படப்புகழ் இயக்குநர் ரத்னகுமார் இயக்கத்தில் நடிகர் சந்தானம் வித்தியாசமான வேடத்தில் நடித்திருக்கும் திரைப்படம் “குலுகுலு”.

Advertising
>
Advertising

சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீஸர்  மாறுபட்ட களத்தில் அனைத்து ரசிகர்களையும் கவர்ந்ததோடு பெரும் வரவேற்பையும்  பெற்றுள்ளது.. வரும் ஜூலை 29 படம் வெளியாகவுள்ள நிலையில் படக்குழுவினர், திரைப்பிரபலங்கள் கலந்துகொண்ட பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது.

ஃபைவ் ஸ்டார் கதிரேசன் கூறியதாவது..,

படத்தின் இசை சிறப்பாக உள்ளது. பாடல்களும், டீசரும் மக்களை ஈர்க்கும் வகையில் இருக்கிறது. சந்தோஷ் நாராயணனனுக்கு எனது வாழ்த்துகள். இயக்குனருக்கும், நடிகர் சந்தானத்துக்கும் எனது வாழ்த்துகள். படம் கண்டிப்பாக வெற்றிப்படமாக அமையும். உதயநிதி சார் திரைத்துறைக்கு பலமாக இருக்கிறார். அவரது விநியோகத்தில் படம் கண்டிப்பாக வெற்றியடையும்.

இந்நிகழ்வினில் கலை இயக்குனர் ஜாக்கி கூறியதாவது..,

“இந்த படம் ரசிகர்களுக்கு ஒரு விஷுவல் டிரீட்டாக இருக்கும். படத்தின் ஸ்கிர்ப்ட் மிக தெளிவாக இருந்தது. கலை இயக்கத்திற்கான அனைத்து விவரங்களும் திரைக்கதை புத்தகத்திலேயே இருந்தது. படத்தின் தரத்தை இசை மேம்படுத்தியுள்ளது. படம் உங்களுக்கு பெரிய விருந்தாக இருக்கும்”

நடிகர் சந்தானம் கூறியதாவது..

இந்த படத்தை பார்த்து உதயநிதி கொடுத்த பரிந்துரைகள் ஒரு இயக்குநருக்கான பார்வையில் இருந்தது. இந்த படத்தை வெளியிட பெரும் உதவியாய் இருந்தார். இந்த கதையை ரத்னகுமார் கூறும் போது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இன்றைக்கு தியேட்டருக்கு வரும் ரசிகர்கள் எதிர்பார்ப்பது இந்த படத்தில் இருக்கும். சந்தோஷ் நாராயணன் எனக்கு செட்டாகும் இசையை ஹிட்டாகும்படி தந்திருக்கிறார். அவர் பாடல்கள் தான் எல்லா இடத்திலும் கேட்கிறது.

இந்த படத்தில் ரத்னகுமார் கடின உழைப்பை போட்டுள்ளார். இவ்வளவு குறுகிய பட்ஜெட்டில், நிறையை இடங்களில் படம் எடுப்பது ரத்னகுமாரால் மட்டுமே முடியும். ரத்னா உடைய நட்பினால் ஒளிப்பதிவாளர், எடிட்டர், இசையமைப்பாளர் எல்லோரும் இந்த படத்தின் உள்ளே வந்தனர். ஒரு குழு முயற்சியாக இந்த படம் உருவாகப்பட்டுள்ளது. படம் எல்லோருக்கும் பிடிக்கும்.

இந்த படத்தில் சந்தானத்துடன் அதுல்யா சந்த்ரா, நமீதா கிருஷ்ணமூர்த்தி, பிரதீப் ராவத், மரியம் ஜார்ஜ், ‘லொள்ளு சபா‘ மாறன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ரெட் ஜெயண்ட் நிறுவனம் இப்படத்தை தமிழகமெங்கும் வெளியிடுகிறது. இப்படம் ஜூலை 29 உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.

VIDEO: "உதயநிதி ஸ்டாலின் உள்ள ஒரு டைரக்டர் இருக்காப்ள"... சந்தானம் சொன்ன சூப்பர் சம்பவம்! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Santhanam speech about udhyanidhi stalin at gulugulu

People looking for online information on Gulugulu, Santhanam, Udhayanidhi Stalin will find this news story useful.