சந்தானம் நடிப்பில் உருவாகும் குலு குலு படத்தை ரத்னகுமார் இயக்க, சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.
சந்தானம்…
சின்னத்திரையில் இருந்து தமிழ் சினிமாவுக்கு அறிமுகமாகி வெற்றி பெற்றவர்களில் நடிகர் சந்தானமும் ஒருவர். சினிமாவில் காமெடி நடிகராக அறிமுகமானவர் நடிகர் சந்தானம். முதலில் காமெடி நடிகராக அறிமுகமாகி, பின்னர் காமெடி ஜானர் படங்களில் ஹீரோவாக நடித்து வரும் சந்தானம் ஆக்ஷன், காமெடி, ரொமாண்டிக் என ஜனரஞ்சகமாக தமது திரைப்படங்களை வழங்கி வருகிறார். இதையடுத்து இவரது படங்களுக்கெனவே ஒரு ரசிகர் கூட்டம் உருவாகி குறிப்பிடத்தகுந்த ஹீரோவாக உயர்ந்துள்ளார்.
அண்மைய படங்கள்…
நடிகர் சந்தானத்தின் நடிப்பில் அண்மையில் டிக்கிலோனா திரைப்படம் நேரடியாக ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகியது. டைம் டிராவல் திரைப்படமான இந்த திரைப்படம் ஒரு ஃபிக்ஷன் படமாகவும், அப்படத்தின் காமெடி - கலாய் ஃபார்முலாவுக்காகவும் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இந்த படத்தில் இடம் பெற்ற டிரிபிள் ஆக்ட் முயற்சி மற்றும் இப்படத்தில் இடம் பெற்ற பேர் வெச்சாலும் என்கிற ரீமிக்ஸ் பாடல் ஆகியவை இப்படத்துக்கு கூடுதல் பலமாக அமைந்தன.அதன் பிறகு சபாபதி உள்ளிட்ட படங்கள் வெளியாகி கவனத்தைப் பெற்றன. ஏஜெண்ட் கண்ணாயிரம் உள்ளிட்ட படங்கள் அடுத்தடுத்து ரிலீஸூக்கு தயாராகி வருகின்றன.
குலுகுலு…
இதையடுத்து இப்போது சந்தானம் மேயாத மான் மற்றும் ஆடை ஆகிய படங்களின் இயக்குனர் ரத்னகுமார் இயக்கத்தில் குலுகுலு என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். இதன் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி கவனத்தைப் பெற்றது. மேலும் படத்துக்காக சந்தானம் டப்பிங் பேசும் புகைப்படமும் வெளியானது. இந்நிலையில் தற்போது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட அது இணையத்தில் அதிக கவனம் பெற்றுள்ளது.
ஃபர்ஸ்ட்லுக்கும் ரிலீஸும்…
மோஷன் போஸ்டர் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் ஆகியவற்றில் சந்தானமும் ஒரு லாரியும் பிரதானமாக இடம்பெற்றுள்ளனர். சந்தானம் இந்த படத்தில் லாரி டிரைவராக நடிப்பதாக சொல்லப்படுகிறது. தற்போது வெளியாகி இருக்கும் போஸ்டரில் சந்தானம் ஜாலியாக சீட்டு விளையாடிக் கொண்டிருக்க, பின்புறத்தில் லாரி கவிழ்க்கப்பட்டு கிடக்கிறது. மேலும் இந்த படம் ஜூன் மாதம் ரிலீஸாகும் என்றும் அறிவித்துள்ளனர்.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8