சந்தானம் நடிச்ச புது படம்.. ஜூலை 29-ல் ரிலீஸ்.. சாட்டிலைட் உரிமத்தை கைப்பற்றிய டிவி சேனல்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் சந்தானம் நடிப்பில் உருவாகும் புதிய படம் குளு குளு. மேயாத மான், ஆடை திரைப்படங்களை இயக்கிய ரத்னகுமார் இயக்கத்தில் இந்த திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

Advertising
>
Advertising

சின்னத்திரையில் இருந்து தமிழ் சினிமாவுக்கு அறிமுகமாகிய சந்தானம் பின்னாட்களில் முன்னணி நகைச்சுவை நடிகராக வளர்ச்சி பெற்றார். இதனை தொடர்ந்து கண்ணா லட்டு திண்ண ஆசையா, தில்லுக்கு துட்டு உள்ளிட்ட காமெடி ஜானர் திரைப்படங்களில் ஹீரோவாகவும் நடித்து வந்தார். அண்மைக் காலங்களில் பிஸ்கோத்து, பாரிஸ் ஜெயராஜ், சபாபதி மற்றும் டிக்கிலோனா திரைப்படங்களில் சந்தானம் ஹீரோவாக நடித்திருந்தார். 

இவற்றுள் டைம் டிராவல் திரைப்படமான டிக்கிலோனா திரைப்படம் ஒரு ஃபிக்‌ஷன் படமாகவும், அப்படத்தின் காமெடி - கலாய் ஃபார்முலாவுக்காகவும் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. தற்போது ஆக்‌ஷன், காமெடி, ரொமாண்டிக் என அனைத்து ஜானர்களிலும் ஆல்ரவுண்டராக வலம் வரும் நடிகர் சந்தானத்துக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளமே உள்ளனர்.

இந்நிலையில் மேயாத மான் மற்றும் ஆடை ஆகிய படங்களின் இயக்குனர் ரத்னகுமார் இயக்கத்தில் சந்தானம் நடிப்பில் குளு குளு என்கிற திரைப்படம் ஜூலை 29-ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. ஏற்கனவே வெளியான இப்பட போஸ்டரில் சந்தானம் ஜாலியாக லாரியின் முன்பாக அமர்ந்து சீட்டு விளையாடிக் கொண்டிருக்க, அவரது பின்புறத்தில் லாரி கவிழ்க்கப்பட்ட காட்சி இருந்தது.

இந்த படம் தான் தற்போது ரிலீஸ் ஆகிறது. இதுகுறித்து இயக்குநர் ரத்னகுமார் தமது சமூக வலைதளத்தில், “இந்திய தொலைக்காட்சிகளில் முதல் முறையாக” என கேப்ஷன் பதிவிட்டு, வரும் ஜூலை 29-ஆம் தேதி ரிலீஸ் ஆகும் சந்தானத்தின் குளு குளு திரைப்படத்தின் சாட்டிலைட் உரிமத்தை பிரபல சேனலான சன்.டிவி. கைப்பற்றியுள்ள தகவலை பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய இணைப்புகள்

Santhanam Gulu Gulu july 29 release satellite rights sun tv

People looking for online information on Ku, KuluKuluFromJuly29, Rathnakumar, Santhanam will find this news story useful.