தெறிக்கவிடும் சந்தானத்தின் ஹிட் படத்தின் அடுத்த பார்ட்.. SHOOT எப்போ? செம அப்டேட்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

Santhanam: நடிகர் சந்தானம் நடிப்பில் அடுத்தடுத்து ஹிட் அடித்த தொடர்வரிசை திரைப்படம் தில்லுக்கு துட்டு.

Advertising
>
Advertising

பேய் பட ட்ரெண்ட்

தமிழ் சினிமாவில் வரிசையாக பேய் படங்கள் வந்து கொண்டிருந்த காலத்தில், பேய் படங்களை காமெடியாக எடுக்கக்கூடிய போக்கும் தொடங்கியது. அந்த படங்களில் பேய் வரும் பகுதிகள் சீரியஸாகவும் மற்ற பகுதிகள் காமெடியாகவும் இருக்குமாறு அமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டன.

காமெடி - என்டர்டெயின்மென்ட்

அதன்பின்பு வருகை தந்தது தான் தில்லுக்கு துட்டு திரைப்படம். இந்த தலைப்புக்கும் படத்துக்கும் கதைக்கும் என்ன சம்பந்தம் என்று கேள்வி எழலாம். ஆனால் இந்த தலைப்புக்கும் படத்தின் வசூலிக்கும் சம்பந்தம் இருக்கிறது. பேய் படத்தை கலாய்த்து தள்ளி, முழுக்க முழுக்க காமெடி - என்டர்டெயின்மென்ட் என குடும்ப பொழுதுபோக்கு திரைப்படமாக இந்த திரைப்படங்கள் உருவாக்கப்பட்டிருந்தன.

வசூல் ரீதியாக..

ராம் பாலா இயக்கத்திலான தில்லுக்கு துட்டு திரைப்படத்தின் முதல் பாகமும் சரி இரண்டாவது பாகமும் சரி திரையரங்குகளில் நேரடியாக வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற திரைப்படங்கள். மேலும் வசூல் ரீதியாகவும் இந்த திரைப்படங்கள் தலைப்புக்கு ஏற்றார்போல் சக்கை போடு போட்டன.

தில்லுக்கு துட்டு 3

இந்த நிலையில்தான் தில்லுக்குதுட்டு திரைப்படத்தின் மூன்றாம் பாகம் வரக்கூடிய தகவல் குறித்த தெரியவந்துள்ளது. அதன்படி, இந்த திரைப்படத்தின் முதல் இரண்டு பாகங்களைத் தொடர்ந்து மூன்றாம் பாகம் ஆர்.கே.என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் உருவாகிறது.

தவிர, இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு ஓரிரு நாட்களில் மணி மஹாலில் நடக்கவிருப்பதாகவும், இந்த திரைப்படத்தை அறிமுக இயக்குனர் ஆனந்த் இயக்கவிருப்பதாகவும் நம்பத்தகுந்த தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. 

முன்னதாக சந்தானம் நடிப்பில் உருவான காமெடி சயின்ஸ் பிக்சன் டைம் ட்ராவல் திரைப்படமான டிக்கிலோனா திரைப்படம் நேரடியாக ஜி5 தளத்தில் வெளியாகி இருந்தது. அண்மையில் நடிகர் சந்தானத்தின் நடிப்பில் சபாபதி திரைப்படம் வெளியாகி இருந்தது. இதனை தொடர்ந்து சந்தானம் நடிப்பில் ஏஜென்ட் கண்ணாயிரம் திரைப்படமும் உருவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: "யார்ரா நீ? என் குழந்தை Birthday-ல?".. பரபரப்பு எண்ட்ரி கொடுத்த ராதிகாவின் மாஜி கணவர்..

தொடர்புடைய இணைப்புகள்

Santhanam Dhilluku Dhuddu 3 shooting update deets

People looking for online information on Anand, Dhilluku Dhuddu, Dhilluku dhuddu 2, RK Entertainment, Santhanam, Santhanam Dhilluku Dhuddu 3 will find this news story useful.