சந்தானம் நடிக்கும் ஏஜெண்ட் கண்ணாயிரம் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

Also Read | போடு.! வரலாற்று புகழ்பெற்ற நகரில் 'பிரேமம்' அனுபமா.. கூட யாரு பாருங்க!
2019 ஆம் ஆண்டு ஸ்வரூப் ஆர்.எஸ்.ஜே இயக்கத்தில் நவீன் பொலிச்செட்டி, ஸ்ருதி ஷர்மா நடிப்பில் வெளியான தெலுங்குப் படம் 'ஏஜெண்ட் சாய் ஸ்ரீனிவாஸ ஆத்ரேயா'.
இந்த படம் தெலுங்கில் 5 கோடி ரூபாய் செலவில் எடுக்கப்பட்டு 20 கோடி ரூபாய் வசூல் செய்தது. இந்த படத்தின் தமிழ் ரீமேக்கில் சந்தானம் நடிக்கிறார்.
வஞ்சகர் உலகம் படத்தை இயக்கிய இயக்குநர் மனோஜ் பீதா இயக்கத்தில் நடிகர் சந்தானம் நடிக்கும் இந்த படத்தின் தமிழ் ரீமேக் கடந்த 2021 பிப்ரவரி மாதம் கோயம்புத்தூரில் தொடங்கிய இந்த படத்தின் படப்பிடிப்பு கொரோனா காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டது. பின்னர் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கப்பட்டு (27.08.2021) அன்றுடன் நிறைவு பெற்றது.
இந்த படத்தில் சந்தானத்துக்கு ஜோடியாக ரியா சுமன் நடிக்கிறார். படத்தின் முதல் பார்வை போஸ்டரும் சில நாட்களுக்கு முன் வெளியாகி உள்ளது. சந்தானத்தின் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் டீசர் ஏற்கனவே வெளியாகி உள்ளது.
டிடெக்டிவ்வாக சந்தானம் நடித்துள்ளார். ஒரு தனியார் துப்பறியும் நபர், தனது சொந்த ஏஜென்சியை நடத்துகிறார், அவரது உதவியாளரின் உதவியுடன் சிறிய வழக்குகளை தீர்க்கிறார். இருப்பினும், ஒரு தந்தை தனது மகளின் கொலையை விசாரிக்க வேண்டும் என்று வரும் போது அடுத்து என்ன நடக்கிறது என்பதே படத்தின் மையக்கரு ஆகும்.
காமெடி த்ரில்லர் வகைமையில் இந்த படம் உருவாகி வருகின்றது. இந்நிலையில் இந்த படம் வரும் நவம்பர் மாதம் 25 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தின் சேட்டிலைட் டிவி மற்றும் ஒடிடி உரிமத்தை முறையே பிரபல முன்னணி நிறுவனமான சன்டிவி & சன் நெக்ஸ்ட் நிறுவனங்கள் கைப்பற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது.
Also Read | அட.. சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் அப்பவே நடித்துள்ள சுந்தர் C.. வைரலாகும் ஃபோட்டோ..