சந்தானம் நடிக்கும் "AGENT கண்ணாயிரம்".. பட ரிலீஸ்க்கு முன் வெளியான SNEEK PEEK!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சந்தானம் நடிக்கும் ஏஜெண்ட் கண்ணாயிரம் படத்தின் SNEEK PEEK ரிலீஸாகி உள்ளது.

Advertising
>
Advertising

Also Read | "யூடியூப் சேனல் ஹேக் ஆயிடுச்சு".. குக் வித் கோமாளி புகழ் பதிவிட்ட பரபரப்பு Post !

2019 ஆம் ஆண்டு ஸ்வரூப் ஆர்.எஸ்.ஜே இயக்கத்தில் நவீன் பொலிச்செட்டி, ஸ்ருதி ஷர்மா நடிப்பில் வெளியான தெலுங்குப் படம் 'ஏஜெண்ட் சாய் ஸ்ரீனிவாஸ ஆத்ரேயா'.

இந்த படம் தெலுங்கில் 5 கோடி ரூபாய் செலவில் எடுக்கப்பட்டு 20 கோடி ரூபாய் வசூல் செய்தது. இந்த படத்தின் தமிழ் ரீமேக்கில் சந்தானம்  நடித்துள்ளார்.

வஞ்சகர் உலகம் படத்தை இயக்கிய இயக்குநர் மனோஜ் பீதா இந்த படத்தினை இயக்கியுள்ளார்.

இந்த படத்தில் சந்தானத்துக்கு ஜோடியாக ரியா சுமன் நடித்துள்ளார்.

காமெடி த்ரில்லர் வகைமையில் இந்த படம் உருவாகி உள்ளது. இந்த படம் நாளை நவம்பர் மாதம் 25 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. ஒரு தனியார் துப்பறியும் நபர், தனது சொந்த ஏஜென்சியை நடத்துகிறார், அவரது உதவியாளரின் (விஜய் டிவி புகழ்) உதவியுடன் சிறிய வழக்குகளை தீர்க்கிறார். இருப்பினும், ஒரு தந்தை (முனிஷ் காந்த்) தனது மகளின் கொலையை  விசாரிக்க வேண்டும் என்று வரும் போது அடுத்து என்ன நடக்கிறது என்பதை மையமாக வைத்து இந்த படம் உருவாகி உள்ளது.

டிடெக்டிவ்வாக சந்தானம் இந்த படத்தில் நடித்துள்ளார். ரியா சுமன், சந்தானம் தோன்றும் இந்த SNEEK PEEK வீடியோ காட்சி தற்போது வெளியாகி உள்ளது. சந்தானம் தேடிச்செல்லும் ஒரு நபர் எதேச்சையாக எதிர்ப்படும் போது அந்த நபரை சந்தானம் பிடிக்க துரத்துவது போல இந்த காட்சி அமைந்துள்ளது.

மேலும் இந்த படத்தின் சேட்டிலைட் டிவி மற்றும் ஒடிடி உரிமத்தை முறையே பிரபல முன்னணி நிறுவனமான சன்டிவி & சன் நெக்ஸ்ட் நிறுவனங்கள் கைப்பற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Also Read | 'வா வாத்தி' பாடலை பாடி அசத்திய சிறுமி மேக்னா😍 .. தனுஷ் & GVP சொன்ன கமெண்ட்ஸ்! CUTE வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Santhanam Agent Kannayiram Movie SNEEK PEEK

People looking for online information on Agent Kannayiram, Agent Kannayiram Movie, Agent Kannayiram Movie SNEEK PEEK, Santhanam will find this news story useful.