"EMOTIONAL-ஆ நான் இத அனுபவிக்கணும்னு நெனைக்கிறீங்க?".. பிரியங்காவை NOMINATE செய்த சஞ்சீவ்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

BiggBoss5Tamil: 84 நாட்களை கடந்து ஒளிபரப்பாகும் விஜய் டிவி பிக்பாஸ் நிகழ்ச்சியின் இந்த 5வது சீசனில், போட்டியாளர்கள் அனைவரும் ஃபினாலே ரேஸை நோக்கி தீவிரமாக ஆடி வருகின்றனர். 

Advertising
>
Advertising

நடிகர் சஞ்சீவ்

நடிகர் சஞ்சீவ், பிக்பாஸ் வீட்டுக்குள் வைல்டு கார்டு எண்ட்ரியாக வந்தவர். நடிகர், சின்னத்திரை நிகழ்ச்சி தொகுப்பாளர் என பன்முகம் கொண்ட சஞ்சீவ், நடிகர் விஜய்யுடன் கல்லூரி பயின்றது, விஜய்யுடனான 30 ஆண்டுகால நட்பு, தன் அக்காவும் பிரபல நடிகையுமான சிந்து மரணித்தது உள்ளிட்ட பல விஷயங்களை ஏற்கனவே பிக்பாஸ் வீட்டுக்குள் பகிர்ந்திருந்தார்.

இதனிடையே இன்னும் 21 நாட்களே இருக்கும் நிலையில், இதன் பொருட்டு ஒவ்வொரு போட்டியாளர்களுமே சக போட்டியாளர்கள் 2 பேரை காரணத்துடன் எவிஷனுக்கு நாமினேட் செய்ய வேண்டும்.

நாமினேஷனை அனுபவிக்கவில்லை

இதில் பிரியங்கா நிரூப் மற்றும் சஞ்சீவை நாமினேட் செய்திருந்தார். இதில் சஞ்ஜ்சீவை நாமினேட் செய்ததற்கும் பிரியங்கா காரணம் கூறியிருந்தார். அதன்படி, “நாமினேஷன் வரை சென்று, வார இறுதியில் கமல் சாரிடம் நாங்கள் வாங்கிய பேச்சை எல்லாம் அவர் வாங்கவில்லை.

அவர் நாமினேஷனை அனுபவிக்கவில்லை. அவர் ஸ்ட்ராங்கானவரும் கூட..” என்பதே, பிரியங்கா சஞ்சீவை நாமினேட் செய்வதற்கு காரணம் என கூறி இருந்தார்.

இதுக்காகவே நாமினேட் செய்றேன்

இதனைத் தொடர்ந்து பேசிய சஞ்சீவ், பிரியங்காவை நாமினேட் செய்திருந்தார். அதில், “இந்த வீட்டுக்குள்ளேயே ஒருவர் தவறு செய்திருந்தார் அல்லது தனக்கு ஒரு தவறை இழைத்துவிட்டார் என சொன்னால், அதை காரணமாக வைத்திருந்து அவரை நாமினேட் செய்யலாம்.

ஆனால் இதுவரை நான் நாமினேஷனையே அனுபவிக்கவில்லை. அதன் காரணமாக நான் நாமினேஷனை அனுபவிக்க வேண்டும் என்கிற நோக்கில் நாமினேட் செய்வது என்பது சரியில்லை. இதனால் நான் பிரியங்காவை நான் நாமினேட் செய்கிறேன். இதற்கு முன்புவரை எனக்கு பிரியங்காவை நாமினேட் செய்யும் எண்ணம் இல்லை” என கூறினார்.

எமோஷனலாக அந்த ஃபீலை நான் அனுபவிக்கணும்னு நினைக்கிறீங்க

இதற்கு பதில் அளித்த பிரியங்கா, “இல்லை நீங்க ஸ்ட்ராங்க் போட்டியாளர். அதனால் தான் அப்படி கூறினேன்” என்று சொல்ல, அதற்கு சஞ்சீவ், “இல்லை. அந்த ஸ்ட்ராங்க் போட்டியாளர் என்பது போட்டியில்.

ஆனால் எமோஷனலாக அந்த ஃபீலை நான் அனுபவிக்கணும் என்று சொன்னதால் நான் பிரியங்காவை நான் நாமினேட் செய்கிறேன்.” மேலும் தன்னுடன் உள்ளே வந்த அமீரை போட்டியாக நினைப்பதால் அவரையும் சஞ்சீவ் நாமினேட் செய்தார்.

தொடர்புடைய இணைப்புகள்

Sanjeev upset with priyanka and nominates her biggbosstamil5

People looking for online information on Biggboss priyanka sanjeev, BiggBoss5, Biggbosstamil, BiggBossTamil5 will find this news story useful.