விஜய் டிவியில் ராஜா ராணி தொடரின் மூலம் ஏராளமான ரசிகர்களை பெற்றவர்கள் ஆல்யா மானஸா - சஞ்சீவ் ஜோடி. அதனைத் தொடர்ந்து இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு அய்லா என்ற மகள் உள்ளார்.

மகளின் புகைப்படங்களை இருவரும் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர அது அடிக்கடி வைரலாகி வருகிறது. இந்நிலையில் காதல், திருமணம் உள்ளிட்ட விஷயங்கள் குறித்து இருவரும் Behindwoods TV பிரத்யேகமாக பேட்டியளித்தனர்.
அப்போது திருமணம் குறித்து கேட்டபோது பதிலளித்த ஆல்யா, அது ரொம்பக் கொடுமைங்க. ஏன் மேரேஜ்லா பண்ணமோனு இருக்கு, கடைசி வரைக்கும் லவ்வே பண்ணிட்டு இருந்துருக்கலாம், யார்தா கண்டு பிடிச்சாங்களோ? வீட்டு வேலைலா செய்ய சொல்றாங்க என்றார். உடனே இடைமறித்த சஞ்சீவ் நீ எங்க வீட்டு வேல செய்யற, எல்லா வேலையும் நான் தான் பண்றேன் என்றார்.
''இதனால மேரேஜ்லா பண்ணிருக்கணுமானு யோசிச்சேன்'' - சஞ்சீவுடனான திருமணம் குறித்து ஆல்யா வீடியோ
Tags : Alya Manasa, Sanjeev Karthick