பிக்பாஸ் நிகழ்ச்சியில் டிவி டிபேட் ஷோ டாஸ்க் நடந்தது. இதில் தாமரையை அடுக்காக அபிஷேக் மற்றும் பிரியங்கா கேள்வி கேட்டனர். இதில் சிபி தாமரைக்கு சலுகைகள் வழங்குவதாக பிரியங்கா மற்றும் அபிஷேக் சிபியிடம் வாதம் செய்தனர்.
அப்போது, “தாமரை உன்னை தங்கப்புள்ள, செல்லப்புள்ள என கொஞ்சுவதால் எல்லாம் தாமரையை கேள்வி கேட்காமல் இருக்க முடியாது!” என சிபியிடம் பிரியங்கா கூற, அதை பார்த்த தாமரைக்கு கோபம் வந்துவிட்டது. “இதை வைத்துதான் கலாய்ப்பீர்களா? நீங்க டார்கெட் பண்ணி பண்ணீங்க” என பிரியங்காவிடம் தாமரை வாதம் செய்தார்.
பின்னர் இது ஒரு பிராங்க் என்றும் இதில் தாமரை தானாகவே அவளது உண்மை முகத்தை வெளிக்கொண்டுவந்து விட்டாள் என்றும், இது டாஸ்க் என்பதை அவள் உணர்ந்தாலும் ஒத்துக் கொள்வதில்லை, ஆனால் மற்றவர்களுக்கு இதே டாஸ்க்கைத்தான் இவள் செய்கிறாள் என்றும் பிரியங்கா அக்ஷரா மற்றும் சஞ்சீவிடம் விளக்கம் கொடுத்தார்.
எனினும் இதுகுறித்து அக்ஷரா வருத்தப்பட்டதுடன், அதை தாமரை அக்கா இதை விரும்பவில்லை என தெரிவித்தார். இதேபோல் சஞ்சீவ், அபினய் உள்ளிட்டோர் இது டாஸ்கிற்கான பிராங்க் என்றால் தாமரை அதை ஏற்கத்தான் வேண்டும் பிரியங்கா சொல்வதில் தவறில்லை என்றனர். இதனைத் தொடர்ந்து அமீர், வருண் மற்றும் சிபி உள்ளிட்டோர் தாமரையிடம், “இது டாஸ்க் என்கிற புரிதல் உங்களுக்கு வேண்டும், டிவி டிபேட் டாஸ்குக்காக நம் ப்ளூ டிவி அணி, ரெட் டிவி அணியினர் குறித்தும் நாம் இப்படியான பெர்சனல் தகவல்களையே சேகரித்தோமே? நாம் மட்டும் டாஸ்கிற்காக செய்தால் சரி.. அவர்கள் செய்தால் தவறா? இதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்” என அட்வைஸ் செய்தார்.
அப்போது அங்குவந்த சஞ்சீவ்,“இசைவாணியுடன் மிரர் டாஸ்க்கில், பேசிமுடிந்துவிட்டு நேரம் இருக்கிறது என கூறி நீங்கள் ஒரு பாடலை பாடினீர்கள் (தினமும் சிரிச்சு மயக்கி) அது அந்த பெண்ணை குறிப்பிட்டு தானே பாடினீங்க? நான் டிவியில பாத்தேன்!” என்றதும் அது நான் எதார்த்தமாக தான் பாடினேன் என தாமரை சொல்ல வர, அதற்குள் சஞ்சீவ், “அது நீங்க வெகுளியா பாடினீங்கனு சொல்லாதீங்க.. ஊருக்கே தெரியும், நீங்க அந்த பொண்ண குறிப்பிட தான் பாடினீங்கனு. கண்டிப்பா இல்லனு நீங்க சொல்லக்கூடாது.” என கூறியதும் தாமரை அழுதுவிட்டார்.
இதேபோல் சிபி பேசும்போது, “இசைவாணி விஷயத்தில் மிரர் டாஸ்க் என்றால் நான் மிரராக பேசுவேன். இது டாஸ்க், நான் என்ன செய்தாலும் நீ அதை அப்படித்தான் பார்க்க வேண்டும் என நீங்கள் சொன்னீர்களே அப்படித்தான் இதுவும், இதையும் புரிந்துகொள்ளுங்கள். உங்களுக்கு இந்த புரிதல் அதிகமாகவே இருக்கும் என்று நான் முன்பு கூட சொல்லி பாராட்டினேனே?” என்று சொன்னார்.