“ராஜூ ஆட்டோ மீட்டர்!.. அக்‌ஷரா புரியாத புதிர்!.. பிரியங்கா..”.. வந்த முதல்நாளே மனுசன் பிண்றாப்ல!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தளபதி விஜய்யின் நெருங்கிய நண்பரும் விஜய்யின் பல திரைப்படங்களில் அவருடன் இணைந்து நடித்தவருமானவர் சஞ்சீவ்.

Sanjeev about biggbosstamil5 housemates at his first day
Advertising
>
Advertising

சின்னத்திரை தொடர்களில் நாயகனாகவும், சின்னத்திரைகளில் தொகுப்பாளராகவும் இருந்திருக்கிறார்.

Sanjeev about biggbosstamil5 housemates at his first day

இந்த நிலையில் அவர் திடீரென பிக்பாஸ் வீட்டுக்குள் சிறப்பு என்ட்ரி கொடுத்திருக்கிறார். அவருடைய வரவு பிக்பாஸ் போட்டியாளர்கள் யாரும் எதிர்பாராத வகையில் இருந்தது.

Sanjeev about biggbosstamil5 housemates at his first day

இதனைத் தொடர்ந்து ஹவுஸ்மேட்ஸூடன் உரையாடிய சஞ்சீவ் ஹவுஸ்மேட்ஸ் ஒவ்வொருவர் பற்றியும் கூறுகிறார். அப்போது வருணை பார்த்து பேசிய சஞ்சீவ், “முதல் வாரம் மிகவும் அமைதியாக இருந்தீர்கள்.. அண்மைக்காலமாக எம்பி எழுந்து ஒரு ஹீரோ மாதிரி சூப்பராகிவிட்டீர்கள்! எனக்கு பிடித்திருக்கிறது.. கலக்கிக் கொண்டு இருக்கிறீர்கள்!” என்று குறிப்பிட்டார்.

இதேபோல் பிரியங்காவை பார்த்துச் சொல்லும் போது, “என்னை பார்ப்பது போன்ற ஒரு கேரக்டர் தான் நீங்கள்.. கொஞ்சினால் கொஞ்சுவீர்கள் .. மிஞ்சினால் மிஞ்சுவீர்கள்!” என்று குறிப்பிட்டார்.

இதனைத் தொடர்ந்து, அக்‌ஷராவைப் பார்த்து சஞ்சீவ் பேசும்பொழுது, ஒரு புரியாத புதிர் என்றும் சஞ்சீவ் கூறினார். அவரை அடுத்து ராஜூ பற்றிப் பேசிய சஞ்சீவ், “இந்த கேமை ஒரு அழகான மீட்டரில் ராஜூ ஓடிக் கொண்டிருக்கிறார்.

எந்த ஆட்டோ மீட்டரும் சூடாகி விட்டா,ல் வேகமாக ஓடும்.. அதுபோல் ராஜூவுக்கும் சூடு பிடிக்கும்!” என்று கேள்விக்குறியுடன் முடிக்கிறார்.

சஞ்சீவ் வருவதற்கு முனதாக ஏற்கனவே எலிமினேட் அபிஷேக் ரீ எண்ட்ரி கொடுத்தார். அவரை அடுத்து விஜய் டிவி கோரியோகிராஃபர் அமீர் டான்ஸ் ஆடிக்கொண்டே தெறி எண்ட்ரி கொடுத்தார்.

இவரை அடுத்து, சஞ்சீவ் எண்ட்ரி கொடுத்துள்ளார்.  இதனிடையே பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்கள் யாரும் எது செய்தாலும் ரியாக்ட் பண்ண கூடாது என்கிற ஒரு டாஸ்கில் இருந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Sanjeev about biggbosstamil5 housemates at his first day

People looking for online information on Akshara, Akshara Reddy, Biggbosstamil, BiggBossTamil5, Priyanka, Raju jeyamohan, Sanjeev, Varun will find this news story useful.