LEO -வில் இணைந்த சஞ்சய் தத்.. விஜய்யை நேரில் சந்தித்த அசத்தல் VIDEO.. தளபதி லுக் மிரட்டலா இருக்கே..

முகப்பு > சினிமா செய்திகள்

By |

வாரிசு திரைப்படத்திற்கு பிறகு நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'லியோ'. மாஸ்டர் திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படத்தில் விஜய் நடித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

Advertising
>
Advertising

இந்த திரைப்படத்தில் விஜய்யுடன் திரிஷா, சஞ்சய் தத், கௌதம் வாசுதேவ் மேனன், பிரியா ஆனந்த், மிஷ்கின், அர்ஜுன், மன்சூர் அலிகான் உள்ளிட்ட ஏராளமான பிரபலங்களும் இந்த படத்தில் நடிக்கின்றனர்.

விஜய் நடிக்கும் லியோ

இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜனவரி 2 ஆம் தேதி துவங்கிய சூழலில் தற்போது காஷ்மீரில் இதன் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. லியோ படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் சார்பில் S. லலித்குமார் தயாரித்து வருகிறார். இந்த படத்தின் இணை தயாரிப்பாளராக ஜெகதீஷ் பழனிசாமி இணைந்துள்ளார்.


லியோ படத்திற்காக நான்காவது முறையாக தளபதி விஜய்யுடன் இசை அமைப்பாளர் அனிருத் கைகோர்த்துள்ளார். இந்த படத்திற்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பை பிலோமின் ராஜூம், கலை இயக்குனராக N.சதீஷ்குமாரும், நடன இயக்கத்தை தினேஷ் மாஸ்டரும் மேற்கொள்கிறார்கள்.

லியோ படத்தின் காஷ்மீர் படப்பிடிப்பில் இயக்குனர்கள் மிஷ்கின், கெளதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர். அவர்களின் காட்சிகள் படமாக்கப்பட்ட சூழலில் அவை சமீபத்தில் நிறைவு பெற்றிருந்தது. இதனைத் தொடர்ந்து, அடுத்தடுத்து மிஷ்கின் மற்றும் கெளதம் வாசுதேவ் மேனன் ஆகியோர் லியோ படப்பிடிப்பை முடித்து விட்டு கிளம்பி இருந்தனர்.

லியோ படத்தின் அப்டேட்

அவ்வப்போது லியோ படத்தின் அப்டேட்கள் இணையத்தில் வலம் வந்த வண்ணம் இருப்பதால் ரசிகர்களும் மிகுந்த உற்சாகத்தில் இருந்து வருகின்றனர். இந்த நிலையில், பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் தற்போது லியோ பிடத்தின் படப்பிடிப்பிற்காக சமீபத்தில் காஷ்மீர் சென்றடைந்திருந்த நிலையில், விஜய், லோகேஷ் கனகராஜ், தயாரிப்பாளர் எஸ். லலித் குமார் உள்ளிட்டோருடன் நடந்த சந்திப்பு தொடர்பான வீடியோ ஒன்றை தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது.

ஸ்டைலிஷ் லுக்கில் விஜய்

விமான நிலையத்தில் இருந்து சஞ்சய் தத்திற்கு அசத்தல் வரவேற்பு கொடுக்கப்பட்டிருந்த சூழலில், நேராக நடிகர் விஜய், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உள்ளிட்டோரையும் சந்திப்பதற்காக அவர் வருகை தந்திருந்தார். தொடர்ந்து, அனைவருடனும் அமர்ந்து சஞ்சய் தத் பேசும் காட்சிகளும் இந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது.

மேலும் இந்த வீடியோவில் மற்றொரு சிறப்பம்சமாக நடிகர் விஜய்யின் அட்டகாசமான லுக் தான் பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. வித்தியாசமான ஹேர் ஸ்டைலில் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் மிகவும் ஸ்டைலிஷாக அவர் இருப்பது தான் அதிகம் ட்ரெண்டிங்கில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
 

 

தொடர்புடைய இணைப்புகள்

Sanjay Dutt joins leo shoot meets vijay and lokesh kanagaraj

People looking for online information on Lalith Kumar, Leo, Lokesh Kanagaraj, Sanjay Dutt, Vijay will find this news story useful.