பிரபல நடிகரின் CANCER போராட்டம்.. BEST FRIEND எழுதிய எமோஷனல் லெட்டர்.!! - குவியும் வாழ்த்துக்கள்.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டுள்ள பிரபல நடிகருக்கு, அவரது நெருங்கிய நண்பர் உருக்கமான கடிதத்தை எழுதியுள்ளார். 

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சஞ்சய் தத். இவர் நடித்த பல படங்கள் ஹிந்தியில் சூப்பர் ஹிட் அடித்தன. மேலும் இவர் பல்வேறு சர்ச்சைகளிலும் சிக்கினார். இவரின் வாழ்க்கையை தழுவி சஞ்சு என்ற படமும் உருவானது. இவர் தற்போது யஷ் நடித்து வரும் கே.ஜி.எஃப்-2வில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில் தற்போது நடிகர் சஞ்சய் தத்துக்கு Stage-4 Lung Cancer உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த விஷயம் இந்தியா முழுவதிலும் இருந்த அவரது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்தது. இந்நிலையில் நடிகரின் சஞ்சய் தத்தின் நெருங்கிய நண்பரான பரேஷ் கெலானி, அவருக்காக ஒரு எமோஷனல் கடிதத்தை எழுதியுள்ளார். 

அதில் அவர் கூறியதாவது, ''பிரதர்.., நாம் இந்த பொழுதுபோக்கு பூங்காவை சுற்றி பார்த்துவிட்டோம் என நினைத்தோம். ஆனால், அது உண்மையில்லை. இன்னொரு ரோலர் கோஸ்டர் ரைடுக்கு செல்ல நாம் தயாராவோம். அடுத்த யுத்தம் இப்போது தொடங்கிவிட்டது. உன்னுடைய தீரத்தை பற்றி நாங்கள் அறிவோம், நீ இதில் வெல்வாய்.'' என பதிவிட்டுள்ளார். இதையடுத்து நடிகர் மாதவன் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்களும் பரேஷின் பதிவுக்கு கமன்ட்ஸ் கொடுத்து வருகின்றனர். 

 

தொடர்புடைய செய்திகள்

சஞ்சய் தத்துக்கு நண்பர் எழுதிய கடிதம் | Sanjay dutt best friend pens emotional letter

People looking for online information on Paresh Ghalani, Sanjay Dutt will find this news story useful.