பிக்பாஸ் சரவணனின் ஸ்டைலிஷ் ஃபோட்டோ - மற்றொரு பிக்பாஸ் பிரபலத்தின் வைரல் கமெண்ட்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவில் 90களில் ஏராளமான படங்களில் ஹீரோவாக நடித்தவர் சரவணன். தற்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். குறிப்பாக கார்த்தியின் சித்தப்பாவாக பருத்தி வீரன் படத்தில் நடிக்க, ரசிகர்களாலும் சித்தப்பு என்றே அழைக்கப்படுகிறார்.

கடந்த வருடம் பிக்பாஸ் சீசன் 3 நிகழச்சியில் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் சாண்டி மற்றும் கவினுடன் அவர் மிகவும் நெருக்கமாக பழகி வந்தார். சில காரணங்களால் அவர் நிகழ்ச்சியை விட்டு பாதியில் விலகும் நிலைமை ஏற்பட்டது.

இந்நிலையில் நடிகர் சரவணன் செம ஸ்டைலிஷாக இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த சாண்டி, சிங்கம் களமிறங்கிருச்சு, சித்தப்பு இஸ் பேக் என்று கமெண்ட் செய்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Sandy comments about Bigg Boss Saravanan's stylish look | பிக்பாஸ் சரவணனின் செம ஸ்டைலிஷ் லுக்கிற்கு சாண்டி கமெண்ட்

People looking for online information on Bigg boss, Sandy, Saravanan will find this news story useful.