RAJA RANI 2: “ஃபோட்டோ, வீடியோ வச்சிருக்கேன்னு மிரட்டுனா…?” – சந்தியாவின் செம்ம ADVICE!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ராஜா ராணி 2 சீரியலின் அடுத்தடுத்த எபிசோட்கள் பார்வையாளர்களைக் கவரும் விதத்தில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertising
>
Advertising

ராஜா ராணி…

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி மெகா தொடர் வெற்றிகரமான ஒன்றாக அமைந்தது. இந்த தொடருக்கு கிடைத்த வெற்றியை அடுத்து ஆரம்பிக்கப்பட்ட ’ராஜா ராணி 2’ சீரியல் தற்போது வெற்றிகரமாக ஓடிவருகிறது. திங்கள் முதல் வெள்ளிவரை இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் சீரியலில் மக்களின் ஆதரவு பெற்ற சந்தியா கதாபாத்திரத்தில் நடித்து வந்த ஆல்யா மானசா விலக அவருக்கு பதிலாக இப்போது ரியா, சந்தியா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

சந்தியாவின் வாழ்நாள் கனவு….

கடந்த சில வாரங்களாக இந்த தொடர் பரபரப்பாக போய்க்கொண்டிருக்கிறது.. தன் கணவன் சரவணனிடம் இதுவரை யாருக்கும் தெரியாத தன்னுடைய வாழ்க்கை லட்சியம் என்ன என்பதைப் பற்றி கூறியுள்ளார். சிறுவயது முதலே சமூகத்தில் நடக்கும் குற்றங்களை தடுக்கவும், குற்றவாளிகளைப் பிடிக்கவும் தானொரு போலீஸ் அதிகாரியாக வேண்டும் என்ற கனவோடுதான் வாழ்ந்ததாக சொல்கிறாள். அதைக் கேட்ட சரவணன் எப்படியாவது சந்தியாவை போலீஸ் ஆக்குவேன் என்று சபதம் எடுத்து அதற்கான வேலைகளை செய்துவருகிறான்.

தடங்கல்களுக்குப் பிறகு….

ஆனால் அதற்கு பல்வேறு தடங்கல்கள் ஏற்பட, அதையெல்லாம் தாண்டி சந்தியா போலிஸ் பயிற்சிக்காக படிக்க ஆரம்பிக்கிறாள். சந்தியாவின் UPSC தேர்வுகளுக்காக அவளை ஒரு கோச்சிங் செண்டரில் சரவணன் சேர்க்கிறார். அந்த கோச்சிங் செண்டரில் தன்னைப் பற்றிய அறிமுகத்தில் ‘சந்தியா இருண்டு கிடந்த வாழ்க்கையில் நம்பிக்கையாக எப்படி சரவணன் இருக்கிறார் என்பதையும், தனது படிப்புக்காக அவர் செய்த தியாகங்களையும் சொல்லி அவரை பெருமைப்படுத்துகிறார். இதையடுத்து வெளியே இருக்கும் சரவணனை வகுப்பறைக்கு வரவழைத்து சக மாணவர்களும் ஆசிரியரும் அவரைக் கைதட்டி பெருமிதப்படுத்துகின்றனர்.

கவனம் ஈர்த்த புதிய ப்ரோமோ…

இந்நிலையில் தற்போது இந்த சீரியலுக்கான அடுத்தடுத்த எபிசோட்களின் ப்ரோமோ வீடியோ வெளியாகி கவனத்தை ஈர்த்துள்ளது. அதில் சரவணனும், சந்தியாவும் ஒரு கல்யாணத்துக்கு செல்ல, அங்கு மணப்பெண்ணின் காதலர் என்று ஒருவர் வந்து மிரட்டுவது போலவும், அதை எதிர்த்து சந்தியா பேசுவது போலவும் அமைந்துள்ளது. சந்தியாவின் பேச்சில் “யாராவது ஒருத்தன் வீடியோ வச்சிருக்கேன், போட்டோ வச்சிருக்கேன், chat ஹிஸ்டரி வச்சிருக்கேன்னு வந்து மிரட்டுனா, அவன் சொல்றதுக்கு அடிபணியனும்னு கிடையாது. வாழ்க்கையே முடிஞ்சுதுன்னு நாம தற்கொலை பண்ணிக்கனும்னு இல்ல. அவனுக்கு பணிஞ்சு போகாதீங்க. துணிஞ்சு எதிர்த்து நில்லுங்க” என உணர்ச்சிப் பூர்வமாக ஆவேசமாக பேசுவது போல அந்த ப்ரோமோ அமைந்துள்ளது. இது இணையத்தில் தற்போது வைரலாக அடுத்தடுத்த எபிசோட்களைப் பார்க்கும் ஆர்வம் உருவாகியுள்ளது.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.


நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8

RAJA RANI 2: “ஃபோட்டோ, வீடியோ வச்சிருக்கேன்னு மிரட்டுனா…?” – சந்தியாவின் செம்ம ADVICE! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Sandhya mass speech Raja rani 2 increase expectation

People looking for online information on Raja Rani 2, Riya, Vijay tv will find this news story useful.