டியூமரால் பாதிக்கப்பட்ட நடிகை சனம் ஷெட்டி - சர்ஜரிக்கு பின் உருக்கமான பதிவு

முகப்பு > சினிமா செய்திகள்

By |

அம்புலி', 'கதம் கதம்', 'சவாரி' உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்து ரசிகர்களுக்கு பரீட்சையமானவர் சனம் ஷெட்டி. இவர் தற்போது தமிழ் பிக்பாஸ் சீசன் 3யின் பிரபல போட்டியாளரான தர்ஷனின் நண்பராக அறியப்படுகிறார்.

தர்ஷனுக்கு ஆதரவான கருத்துக்களை தொடர்ச்சியாக அவர் தனது சமூக வலைதள பக்கங்களில் பதிவு செய்து வந்தார். மேலும் தர்ஷன் எவிக்ட் செய்யப்பட்டது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ''இது வருத்தமான நிகழ்வு. பிக்பாஸ் இது அழகில்லை என்று வருத்தம் தெரிவித்திருந்தார்.

சனம் ஷெட்டி  தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மருத்துவமனையில் படுத்திருப்பது போன்ற புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், ''டியூமர் பற்றி சில மாதங்களுக்கு முன்பு தெரியவந்தது. ஆனால் அதனை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை அதனால்  சர்ஜரி செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டேன். நான் செய்யும் அறிவுரை என்னவென்றால் உங்கள் ஆரோக்கியம் மற்றும் உடல்நிலை சம்பந்தபட்ட விஷயங்களை அலட்சியப்படுத்தாதீர்கள். எனக்காக கடவுளிடம் வேண்டிக்கொள்ளுங்கள் நண்பர்களே என்று பதிவிட்டு இருந்தார்..

இதனைத் தொடர்ந்து இன்று  காலை தனது இன்ஸ்டாகிராம் பதிவில், "நான் வீட்டுக்கு வந்துவிட்டேன் என்ற செய்தி . உங்களுக்கு மகிழ்வைத் தரும். அறுவை சிகிச்சை நல்லபடியாக நடந்து முடிந்தது. இன்னும் இரு நாட்களில் நான் மீண்டும் சரி ஆகிவிடுவேன். உங்களுடைய பிரார்த்தனைகளுக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி. இது எனக்கு  மிகப்பெரிய விஷயம். உங்கள் அனைவருக்கும் என் அன்பு. என்னுடைய மருத்துவர்களுக்கு நன்றி" என்று தெரிவித்த தெரிவித்துள்ளார் சனம் ஷெட்டி

Sanam Shetty outcome of her Tumor Surgery Bigg Boss Tharshan

People looking for online information on Sanam Shetty will find this news story useful.