நேற்று பிக்பாஸ் வீட்டில் கமல் ஒரு டாஸ்க் கொடுத்தார். அதே டெய்லர் அதே வாடகை என்பது போல முதல் வாரம் ஹார்ட் டாஸ்க், 2-வது வாரம் மாஸ்க் டாஸ்க் இந்த வாரம் அரசன்-அரக்கன் என்பது போல விளையாட்டு இருந்தது. பிடித்த நபர்களை ராஜாவாகவும், பிடிக்காத நபர்களை அரக்கனாகவும் தேர்வு செய்ய வேண்டும்.
டாஸ்க்கிற்கு ஏற்ற மாதிரி கீரிடங்களை அளித்து இருந்தனர்.
சிலபல நாட்களாக பாலாஜி-சனம் இவங்க ரெண்டு பேருக்கு நடுவுல என்ன நடக்குது என நெட்டிசன்கள் குழம்பி போயிருக்க அதற்கு எண்ணெய் ஊற்றுவது போல இந்த சம்பவம் நடந்துள்ளது. இதைப்பார்த்த வேறு சிலரோ நேற்று முன்தினம் பாலாஜி-கேப்ரியலா இருவரும் பிங்க் கலர் ட்ரெஸ் போட்டு இருந்தனர். நேற்று பாலாஜி-சனம் இருவரும் பிளாக் கலர் ட்ரெஸ் போட்டு இருந்தனர். என நாசா விஞ்ஞானிகள் அளவுக்கு ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.
என்னப்பா நடக்குது?
Tags : Balaji Murugadoss