இது நம்ம லிஸ்ட்லயே கெடையாதே... நீங்க வேற 'லெவல்'ல வெளையாடுறீங்க!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று சுவாரஸ்யமான டாஸ்க் ஒன்றை கமல் கொடுத்தார். அதாவது யார் முகமூடி போட்டு கொள்கிறார்களோ அவர்களுக்கு மாஸ்க் கொடுக்க வேண்டும் என்று கூறினார். அதேபோல யாரை பிடித்து இருக்கிறதோ அவர்களுக்கு பேட்ஜ் அளிக்கும்படி தெரிவித்தார்.

இதில் ரியோ, ஆரி இருவருக்கும் அதிகமான மாஸ்க்குகள் கிடைத்தன. அனிதா, வேல்முருகன், நிஷா ஆகியோருக்கும் சொற்ப மாஸ்க்குள் கிடைத்தன. யாரும் எதிர்பாராதவிதமாக ஷிவானி, அர்ச்சனா ஆகியோருக்கு பேட்ஜ்கள் நிறைய கிடைத்தன. இதில் சனம் ஷெட்டி யாரும் எதிர்பாராதவிதமாக தன்னுடைய தோழி அனிதாவுக்கு மாஸ்க் அளித்தார். அதேபோல பேட்ஜை ஆஜித்துக்கு அளித்தார்.

நேற்றுவரை தோழிகளாக இருந்த அனிதாவுக்கு, சனம் ஷெட்டி  மாஸ்க் அளித்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதைப்பார்த்த ரசிகர்கள் சனம் ஆட்டத்துக்குள் வந்து விட்டார் இனி பிக்பாஸ் வீட்டில் ஏகப்பட்ட பட்டாசுகள் வெடிக்கும் என கருத்து தெரிவித்து வருகின்றனர். பந்து டாஸ்க்கில் சனம், வேல்முருகன் இருவரும் வெற்றி பெற்றதால் இந்த வாரம் அவர்கள் இருவரையும் யாரும் நாமினேட் செய்ய முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய இணைப்புகள்

Sanam Shetty gave mask for Anitha Sampath, fans confused!

People looking for online information on Bigg Boss 4 Tamil will find this news story useful.