நேற்று பிக்பாஸ் வீட்டில் வழக்கம்போல கிச்சனில் பிரச்சினை வெடித்தது. வழக்கமாக கிச்சன் டீமில் தானே பிரச்சினை வரும் என்கிறீர்களா? டீம் பிரித்து விட்டதால் கிச்சனில் தான் இந்த சண்டை நடந்தது. சுரேஷ் சக்கரவர்த்தி வழக்கம்போல ஏதோ பேச பதிலுக்கு சனம் ஷெட்டி என்ன கார்னர் பண்றீங்க? என ஆரம்பித்தார். சுரேஷ் என்ன சமாதானம் சொன்னாலும் சனம் கேட்பதாக இல்லை.
சண்டை போட்டே தீருவேன் என அடம்பிடித்தார். சுரேஷிடம் அது செல்லுபடி ஆகுமா? ஏதோதோ பேசி அந்த உரசலுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் சுரேஷ். இதன் தொடர்ச்சியாக வீட்டின் வெளியே அமர்ந்து அனிதாவுடன் பேசிக்கொண்டிருந்த சனம் இவரை எப்படி கேப்டனாக போட்டார்கள் என தெரியவில்லை என்று அவரிடம் புலம்பி கொண்டிருந்தார். பொறுமையாக இருக்க வேண்டும் என்று முடிவு செய்திருப்பார் போல பதிலுக்கு அனிதா எதுவும் சொல்லவில்லை.
போன வாரம் முழுவதும் அனிதா-சுரேஷ் சக்கரவர்த்தி இருவரும் அடிக்கடி ப்ரோமோவில் இடம் பிடித்தார்கள். இந்த வாரம் கிச்சன் டீம் பிரிந்து சுரேஷ் கேப்டனாகி விட்டதால் அனிதா-சுரேஷ் இடையே பெரிதாக எந்தவொரு உரசலும் நிகழவில்லை. ஆனால் அனிதாவுக்கு பதிலாக சனம் ஷெட்டி இனி அடிக்கடி ப்ரோமோவில் இடம் பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. பாலாஜி-சனம் இடையிலான மாடலிங் பஞ்சாயத்து கமல் முன்னிலையில் நேற்று முன்தினம் தான் முடிவுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது!