"இதுக்கா உங்களுக்கு ஓட்டு போட்டோம்"... சனம் ஷெட்டி மீது கடுப்பான ரசிகர்... பதிலளித்த சனம்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நடந்து முடிந்திருக்கிறது. இந்நிலையில்  கடுமையான போட்டியாளராக கருதப்பட்ட நடிகை சனம் போட்டியில் இருந்து வெளியேறியது ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்தது. காரணம் மனதில் பட்டதை நேர்மையாகவும் தைரியமாகவும் கூறும் பழக்கம் உடையவர் சனம் செட்டி. இதனால் அந்த வீட்டில் சிலரது எதிர்ப்பை சம்பாதித்தாலும், மக்கள் அவரை பல சமயங்களில் பாராட்டி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து சமூக வலைதளங்களில் கூட #NoSanamNoBiggboss என்ற ஹேஷ்டேக் வைரலானது.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சனம் ஷெட்டியை ஏராளமானோர் இன்ஸ்ட்டாகிராமில் பின்தொடருகின்றனர். இந்நிலையில் சமீபத்தில் நடிகை சனம் ஷெட்டி தனியார் நிறுவன பொருள் ஒன்றுக்கு விளம்பரம் செய்யும் வகையில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதற்கு கீழே ரசிகர் ஒருவர் "இதை தான் நாங்கள் வெறுக்கிறோம். ஒரு மாற்றத்தை கொண்டு வர வேண்டும் என்பதற்காக தான் உங்களுக்கு ஓட்டு போட்டோம். ஆனால் நீங்கள் ஏதோ ஒன்றை இங்கே விளம்பரப்படுத்தி வருகிறீர்கள். எங்களுக்கு இது வெட்கம்" என்று கூறியுள்ளார். இதற்கு பதிலளித்துள்ள சனம் ஷெட்டி "உங்கள் ஆதரவு மற்றும் ஓட்டுகளுக்கு மிக்க நன்றி. தான் இவர்களின் சில பொருட்களைப் பயன்படுத்தி எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அதுதான் நான் அவர்களை விளம்பரப்படுத்த முக்கிய காரணம். இது ஏதோ ஒன்று கிடையாது" என்று கூறியுள்ளார்.

Tags : Sanam

Sanam replies to a fan's criticism கடுப்பான ரசிகருக்கு பதிலளித்த சனம்

People looking for online information on Sanam will find this news story useful.