'வாத்தி' படம் குறித்து நடிகை சம்யுக்தா மேனன் நமது பிஹைண்ட்வுட்ஸ் சேனலுக்கு பிரத்யேக பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.
Images are subject to © copyright to their respective owners
நாகவம்சியின் சித்தாரா என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் தனுஷ் நடிக்கும் தமிழ் - தெலுங்கு திரைப்படம் 'வாத்தி'. பிரபல தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கும் இந்த படத்திற்கு தெலுங்கில் சார் (Sir) என்றும் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
இப்படத்தில் தனுஷூடன் நடிகை சம்யுக்தா மேனன்,சாய் குமார், தணிகெள பரணி, சமுத்திரக்கனி, தோட்டப்பள்ளி மது, நர்ரா ஸ்ரீனிவாஸ், பம்மி சாய், ஹைப்பர் ஆதி, ஷாரா, ஆடுகளம் நரேன், இளவரசு, மொட்ட ராஜேந்திரன், ஹரீஷ் பேரடி, பிரவீணா ஆகியோர் நடிக்கிறார்கள்.
இப்படத்துக்கு யுவராஜ் ஒளிப்பதிவு செய்ய, எடிட்டராக நவீன் நூலி , இசையமைப்பாளராக G.V.பிரகாஷ் இந்த படத்தில் பணிபுரிகின்றனர்.
இந்த படம் வரும் பிப்ரவரி மாதம் 17 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை பிரபல தயாரிப்பாளர் லலித் குமார் தனது 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் மூலம் கைப்பற்றி உள்ளார்.
இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று முன்தினம் மாலை சென்னை சிறுகளத்தூர் சாய் லியோ நகரில் உள்ள சாய்ராம் கல்லூரியில் நடந்தது. இந்த விழாவில் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.
Images are subject to © copyright to their respective owners
இந்நிலையில் நமது பிஹைண்ட்வுட்ஸ் சேனலுக்கு பிரத்யேக பேட்டி ஒன்றை நடிகை சம்யுக்தா மேனன் அளித்துள்ளார். அப்போது அவரிடம், "வாத்தி படத்தை தனுஷ் ரசிகர்கள் & பொதுவான ரசிகர்கள் என்ன மாதிரியான படமாக எதிர்பார்க்கலாம்?" என்ற கேள்விக்கு பதில் அளித்த சம்யுக்தா மேனன், "இந்த படத்தின் இலக்கு தெளிவாக இருக்கும். கல்வித்துறை அமைப்பு குறித்து படம் பேசும். கிராமத்தில் நடக்கும் கதை இது. நமக்கு எளிதாக தொடர்புபடுத்த கூடிய கதாபாத்திரங்களின் வாயிலாக கதை சொல்லப்படும். குறிப்பாக இரண்டாம் பாதியில் ரசிகர்களுக்கு இந்த படம் எமோஷனலாக கனெக்ட் ஆகும்." என சம்யுக்தா மேனன் பதில் அளித்தார்.