நேற்று டெலிகாலர் டாஸ்க்கில் சனம் போன் செய்து சம்யுக்தாவிடம் பேசியபோது கலீஜ் என்றால் என்ன? என்று கேட்டார். இதுகுறித்து சம்யுக்தா விளக்கம் அளித்தபோது அவங்க வளர்ப்பு அப்படி என சில வார்த்தைகளை சரளமாக பயன்படுத்தினார். இது வீட்டின் உள்ளே வெடித்தது. அகம் டிவி வழியே இதைப்பார்த்த ஆரி அதற்கு சம்யுக்தாவிடம் விளக்கம் கேட்டார்.

பதிலுக்கு பாலாஜி போல அவரும் என்னை motherhood என்ற வார்த்தையை சொல்லி கிண்டல் அடித்தார் என வண்டியை ஆரி பக்கம் திருப்பினார். அவ்வளவு தான் ரம்யா, பாலாஜி, ஷிவானி என அவருக்கு உடனே ஆதரவு கொடுக்க வந்து விட்டனர். ஒருவழியாக சம்யுக்தாவும் அந்த பிரச்சினையில் இருந்து தப்பித்து விட்டார். அவரை அர்ச்சனா உள்ளிட்டோர் அரவணைத்து கொண்டனர்.
இதைப்பார்த்த ரசிகர்கள் ஆரி சொன்ன ஒரு வார்த்தைக்கு ஸாரி கேட்க வைத்த சம்யுக்தா எத்தனை பட்டப்பெயர்களை வைத்து இருக்கிறார் தெரியுமா? என கேள்வி எழுப்பி வருகின்றனர். அதன்படி சனம், அனிதாவுக்கு முந்திரிக்கொட்டை சிஸ்டர்ஸ், சனமிற்கு கலீஜ், அனிதாவுக்கு சிடுமூஞ்சி மேக்ஸ், ஆரி வளர்ப்பு சரியில்ல, அனிதா கல்ச்சர் இல்ல என பல்வேறு பெயர்களை வைத்து கிண்டலடித்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.