பிக்பாஸ் நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் இந்த வாரம் ஆரம்பித்ததிலிருந்தே சனம், அனிதா, ஆரி மூவருக்கும் சம்யுக்தாவுக்கும் பயங்கரமாக முட்டி கொள்கிறது. அதன் ஒரு பகுதியாக சனமும், அனிதாவும் மாறி மாறி சம்யுக்தாவை நாமினேட் செய்வதை பார்க்க முடிந்தது. மேலும் சம்யுக்தா கடுமையாக பேசுகிறார் என்று அனிதா ஒரு குற்றச்சாட்டை வைத்தார். இந்நிலையில் தற்போது வைரல் ஆகி வரும் ஒரு Unseen வீடியோவில், சம்யுக்தாவும், அர்ச்சனாவும் இரவில் அமர்ந்து பேசும் ஒரு காட்சி வெளியாகியுள்ளது.
அப்பொழுது அர்ச்சனா கூறும்பொழுது "இவங்க சொல்றது எனக்கு பிரச்சனையல்ல. இதுங்கெல்லாம் சொல்றதை கேட்கணுமா என்பதுதான் என் பிரச்சனை" என்று கூறுகிறார். பின்தொடர்ந்து சம்யுக்தாவும் "அதே தான் எனக்கும். இதுங்கெல்லாம் சொல்றதை கேட்கணுமா. இதுங்களுக்கெல்லாம் தகுதியே இல்லை. வேல்முருகன் செல்வதற்கு முன்பாகவே இந்த மூணு பேரும் வெளியே சென்றிருக்க வேண்டும்" என்று கடுமையாகப் பேசியுள்ளார். சக போட்டியாளர்களை அர்ச்சனாவும், சம்யுக்தாவும் மரியாதை இல்லாமல் பேசிய இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
