ஓடிடியில் ரிலீஸா? சமுத்திரகனி, யோகிபாபு நடிப்பில் சந்தோஷ் நாராயணன் இசையில் வெள்ளை யானை!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சுப்ரமணியம் சிவா இயக்கியுள்ள வெள்ளை யானை திரைப்படம் சன் நெக்ஸ்ட் ஓடிடியில் ரிலீஸாக உள்ளதாக தகவல்கள் தெரியவந்துள்ளன.

திருடா திருடி, சீடன் உள்ளிட்ட தனுஷின் படங்களை இயக்கியவரும் தனுஷின் ரசிகர் மன்றத் தலைவருமானவர் இயக்குநர் சுப்ரமணியம் சிவா. இவரது இயக்கத்தில் சமுத்திரக்கனி, யோகி பாபு,  'மனம் கொத்திப் பறவை' ஆத்மியா ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் வெள்ளை யானை.

இந்த படத்தின் டிரைலரை நடிகர் தனுஷ் வெளியிட்டிருந்தார். விவசாயிகளின் வாழ்வை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ள இந்த படத்தின் டிரைலர் காட்சிகள் விவசாயிகளின் மேன்மையை உன்னதமாக பேசுவது தெரிகிறது.

சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இந்த இந்த திரைப்படம் திரையரங்கில் ரிலீஸ் ஆகாமல் தள்ளிப்போய்க் கொண்டிருந்த நிலையில் இப்போது சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்திலும் பின்னர் சன்
தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பாகவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த தகவல் குறித்து நாம் கேட்டறிந்தபோது இயக்குநர் சுப்ரமணியம் சிவா இதனை உறுதிப்படுத்தியுமுள்ளார். இந்த கொரோனா சூழலில் திரையரங்குகளில் படத்தை ரிலீஸ் பண்ண முடியாத நெருக்கடி இருப்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

ALSO READ: 'அம்பாசமுத்திரம் அம்பானி' ஹீரோயினுக்கு அபராதம்!.. சாதி சான்றிதழ் விவகாரத்தில் நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு!

தொடர்புடைய இணைப்புகள்

Samuthirakani vellaiyaanai santhosh narayanan OTT release

People looking for online information on Aathmiya, Samudrakani, Santhosh Narayanan, Subramaniam siva will find this news story useful.