தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை சமந்தா. இவர் விண்ணைத்தாண்டி வருவாயா, நீதானே என் பொன்வசந்தம், கத்தி, தெறி, மெர்சல் போன்ற பல ஹிட் படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் நடிகை சமந்தா தெலுங்கு சூப்பர் ஸ்டார் நடிகரான நாகர்ஜுனாவின் மகன் நாக சைதன்யாவை 2017 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில் நாகர்ஜுனாவின் மொத்த குடும்பமும் சேர்ந்து சமீபத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையை சிறப்பாக கொண்டாடியுள்ளனர். இந்த புகைப்படத்தை குடும்பத்தினருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில் அவர் அழகான தங்க நிறத்திலான உடையை அணிந்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. அவர் இந்த புகைப்படத்திற்கு மேலே "கிறிஸ்துமஸ் மகிழ்ச்சி... ஹாப்பி நியூ இயர்... Bye Bye 2020" என்று மகிழ்ச்சியுடன் தலைப்பிட்டுள்ளார்.