சமந்தா நடிக்கும் PAN INDIA படம் 'யசோதா'.. டீஸர் ரிலீஸ் எப்போ? அதிரடியான போஸ்டர்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சமந்தா நடிக்கும் 'யசோதா' படத்தின் டீஸர் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

Advertising
>
Advertising

Also Read | சந்தானம் நடிக்கும் புதிய காமெடி திரைப்படம்.. டைட்டிலுடன் சூப்பர் வெளியான FIRST LOOK POSTER!

தமிழ் தெலுங்கு திரையுலகில் முன்ணனி நாயகியாக வலம் வரும் நடிகை சமந்தா,  தனிச்சிறப்பு மிக்க நடிப்பை வெளிப்படுத்தி “ஃபேமிலிமேன் 2” தொடர் மூலம் இந்திய அளவில் முன்னணி நடிகையாக,  நட்சத்திர அந்தஸ்தை அடைந்துள்ளார்.

நடிகை சமந்தா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் ‘யசோதா’ திரைப்படத்தினை Sridevi Movies  சார்பில்  சிவலெங்கா கிருஷ்ண பிரசாத் தயாரிக்கிறார். ஹரி-ஹரீஷ் கூட்டணி இப்படத்தில் இயக்குனர்களாக அறிமுகமாகிறார்கள். Sridevi Movies தயாரிப்பு நிறுவனம் 'யசோதா' படத்தை தங்களின் 14வது தயாரிப்பாக உருவாக்கி வருகிறது.

இந்தப் படத்தில், பிரபல நடிகர்களான வரலட்சுமி சரத்குமார், உன்னி முகுந்தன், ராவ் ரமேஷ், முரளி சர்மா, சம்பத் ராஜ், பிரியங்கா சர்மா மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

தெலுங்கு, தமிழ், ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் இந்த படம் விரைவில் வெளியாக உள்ளது.

ஏற்கனவே இந்த படத்தின் முன்னோட்டம் வெளியானது. தற்போது படக்குழு புதிய டீஸர் வீடியோ வெளியாகும் நாள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வரும் செப்டம்பர் மாதம் 9 ஆம் தேதி, மாலை 5:49 மணிக்கு இந்த படத்தின் டீஸர் வீடியோ வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிரத்யேக போஸ்டருடன் படநிறுவனம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. போஸ்டரில் முகத்தில் காயத்துடன் சமந்தா தோன்றியுள்ளார்.

மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின் தயாரிப்பு பணிகளும் துவங்கி உள்ளன.

Also Read | ஆர்யா நடிக்கும் Sci-fi திரைப்படம் 'கேப்டன்'.. சென்சார் போர்டு கொடுத்த சர்டிபிகேட்!

தொடர்புடைய இணைப்புகள்

Samantha Yashoda Teaser ready to stream on September 9th

People looking for online information on Samantha ruth prabhu, Samantha Yashoda Movie, Yashoda Teaser will find this news story useful.