நடிகை சமந்தா, தென்னிந்தியாவின் முன்னணி திரைப்பட நடிகை.
பல திரைப் படங்களில் நாயகியாக நடித்து புகழ்பெற்ற சமந்தா, தமிழைப் பொறுத்தவரை விஜய் சேதுபதி மற்றும் நயன்தாராவுடன் இணைந்து காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தில் நடித்து இருக்கிறார்.
விக்னேஷ் சிவன் இயக்கத்திலான இந்த திரைப்படம் விரைவில் வெளியாவதற்கு தயாராகிக் கொண்டிருக்கிறது. இதனிடையே நடிகை சமந்தா, அதிகாரப்பூர்வமாக தன் கணவர் சைதன்யாவுடனான திருமண உறவை மனமொத்து முறித்துக்கொள்வதாக அண்மையில் அறிவித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து தற்போது தீபாவளியான இன்றும் கூட வெறித்தனமாக சமந்தா உடற்பயிற்சி செய்யக்கூடிய வீடியோ வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பதிவிட்டுள்ள சமந்தா, தீபாவளி எனும் பெயருக்கான விளக்கத்தை, உடற்பயிற்சி செய்யக்கூடிய வார்த்தைகளை வைத்து குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி diwali-ல்
D - deadlift
I - inchworm push-up
W - Wall Balls
A - alternating star crunches
L - lunge press
I - Ice skaters
என்று சமந்தா விளக்கம் அளித்துள்ளார்.
இந்த விளக்கமும் தற்போது வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்த்த சமந்தா ரசிகர்கள் மன உறுதியும் உடல் உறுதியும் தளராத சமந்தாவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.