தெலுங்கின் முன்னணி நடிகர்களாக இருக்கும் விஜய் தேவரகொண்டா மற்றும் சமந்தா நடிப்பில் 'குஷி' என்ற புதிய படம் உருவாகி வருகிறது.
Also Read | “கடவுளின் தேசத்தில் கமல்ஹாசன்”… ‘விக்ரம்’ விநியோகஸ்தர் ஷிபு தமீன்ஸ் மாஸ் update
சமந்தா – விஜய் தேவர்கொண்டா ‘குஷி’
சமந்தா மற்றும் விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகி வரும் ‘குஷி’ படத்தை இயக்குனர் ஷிவா நிர்வாணா இயக்கி வருகிறார். இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் சில நாட்களுக்கு முன் வெளியிட்டுள்ளனர். 'குஷி' திரைப்படம் இந்த ஆண்டு டிசம்பர் மாதம் 23ஆம் தேதியன்று உலகம் முழுதும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. 'குஷி' உற்சாகமான.. வண்ணமயமான.. காதல் கதையாக இருக்கும் என சொல்லப்படுகிறது. இந்த படத்துக்கு ஹிருதயம் படத்தின் இசையமைப்பாளரான ஹிஷம் அறப்துல் வஹாப் இசையமைக்கிறார்.
‘குஷி’ கலைஞர்கள்…
'குஷி' தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் பேன் இந்தியா திரைப்படமாக வெளியாகிறது. விஜய் தேவரகொண்டா, சமந்தா உடன் ஜெயராம், சச்சின் கெடகர், முரளி ஷர்மா, லக்ஷ்மி, அலி, ரோகிணி, வெண்ணிலா கிஷோர், ராகுல் ராமகிருஷ்ணா, ஸ்ரீகாந்த் ஐயங்கார், சரண்யா ஆகியோர் நடிக்கின்றனர். இப்படத்துக்கு முரளி ஒளிப்பதிவு செய்கிறார். இவர் காலா, கபாலி, மெட்ராஸ் படங்களின் ஒளிப்பதிவாளர் ஆவார். புஷ்பா படத்தின் தயாரிப்பாளர் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
காஷ்மீர் படப்பிடிப்பு…
குஷி படத்தின் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களாக காஷ்மீரில் நடந்தது. இதையடுத்து நேற்று முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்ததாக படக்குழு அறிவித்தது. மேலும் படக்குழுவினரின் BTS புகைப்படங்களை வெளியிட அது இணையத்தில் வைரலானது. விரைவில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு துவங்கும் என்றும் அறிவித்திருந்தனர். இந்நிலையில் குஷி படத்தின் காஷ்மீர் படப்பிடிப்பின் போது விபத்து ஒன்று நிகழ்ந்ததாகவும், அதில் விஜய் தேவரகொண்டா மற்றும் சமந்தா ஆகியோர் காயமடைந்ததாகவும் சமூகவலைதளங்களில் தவறான செய்தி ஒன்று பரவியது.
படக்குழு விளக்கம்…
அதை இப்போது படக்குழுவினர் மறுத்துள்ளனர். இது சம்மந்தமாக பிரபல இயக்குனர் ஷிவா நிர்வாணா ‘பொய்யான செய்தி’ என்று டிவிட்டரில் மறுத்துள்ளார். மேலும் இது சம்மந்தமாக படத்தின் செய்தி தொடர்பாளர் வெளியிட்டுள்ள தகவலில், “குஷி படப்பிடிப்பில் விஜய் தேவரகொண்டா மற்றும் சமந்தா காயமடைந்ததாக சில பொய்யான செய்திகள் பரவி வருகின்றன. அது உண்மையில்லை. படக்குழு காஷ்மீரில் 30 நாட்கள் படப்பிடிப்பை முடித்து நேற்று ஐதராபாத் திரும்பியுள்ளது. இதுபோன்ற செய்திகளை நம்பாதீர்கள்” என்று தெரிவித்துள்ளதன் மூலம் உண்மை நிலவரம் தெரியவந்துள்ளது.
Also Read | ‘கேன்ஸ்’ திரைப்பட விழாவில் வெளியான ‘Top Gun Maverick’… டாம் க்ரூஸுக்கு ‘Palme d’Or’ விருது