நாக சைதன்யாவை எல்லாத்திலும் UNFOLLOW செய்த SAMANTHA.. திடீர்னு ஏன் இப்படி பண்ணாங்க?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஐதராபாத்: சமந்தா (Samantha) தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர், விண்ணைத்தாண்டி வருவாயா, நீ தானே என் பொன்வசந்தம் படங்களின் தெலுங்கு உருவாக்கத்தில் நடித்து புகழ்பெற்றார்.  சமீபத்தில் ரங்கஸ்தலம், சூப்பர் டீலக்ஸ், பேமிலி மேன் 2 இவருக்கு நல்ல பேரை பெற்றுத்தந்தது.

Advertising
>
Advertising

விண்ணை தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிக்கும்போது சமந்தாவும்,  நடிகர் நாகார்ஜுனாவின் மகன் நடிகர் நாக சைதன்யாவும் காதல் வயப்பட்டனர். அதனைத் தொடர்ந்து இருவரும் 2017ல் கிறிஸ்தவ முறைப்படியும் இந்து மத முறைப்படியும் திருமணம் செய்து கொண்டனர்.

அதன் பின்னர் இந்த ஜோடி ரசிகர்களிடம் பிரபலமான ஒன்றாக மாறியது. தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்த பிறகு சமீபத்தில் இருவரும் விவாகரத்து செய்தனர். மேலும் இருவரும் தனி தனி பாதைகளில் பயணம் செய்யப்போவதாகவும், மேலும் மீடியா, ரசிகர்கள் இந்த கடினமான காலத்தில், எங்கள் பிரைவசியை மதிக்குமாறும் நடிகை சமந்தா கேட்டுக்கொண்டார். இருவரும் பிரிந்ததாக அறிவித்ததால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். சமூக வலைதளங்களில் பலரும் பல்வேறு கருத்துக்களை இதுகுறித்து தெரிவித்து வந்தனர்.

பின் நடிகை சமந்தா தனது சமூக வலைதள கணக்குகளில் தனது பெயரை சம்னதா அக்கினேனி என்பதை சமந்தா என மாற்றினார். விவாகரத்துக்கு பின் தற்போது தமிழில் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’, இயக்குனர் சாந்தரூபன் ஞானசேகரன் இயக்கத்தில் ட்ரீம் வாரியர்ஸ் தயாரிக்கும் புதிய படம்,  தெலுங்கில் ‘ஷகுந்தலம்’ 'யசோதா' படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் வெளியான புஷ்பா தி ரைஸ் படத்தின் ஒ அண்ட்டா வா மாவா பாடலுக்கு நடனமாடி வைரலானார். இந்த பாடல் தென்னிந்தியா முழுவதும் பட்டி தொட்டி எங்கும் ஹிட் அடித்தது

மேலும் சமீபத்தில் நாக சைதன்யா ஒரு பிரபல முன்னணி சேனலில் பேட்டி அளித்தார். அதில், சமந்தாவின் மகிழ்ச்சியே தனக்கும் மகிழ்ச்சி என்றும், சமந்தாவும் தானும் இப்பவும் நல்ல நண்பர்கள் என்று கூறியிருந்தார். மேலும் நடிகை டாப்ஸியின் அவுட்சைடர்ஸ் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் ஒரு புதிய படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாகிறார் சமந்தா.

இந்நிலையில் நடிகை சமந்தா நாக சைதன்யாவை தனது அனைத்து சமூகவலைதளங்களிலும் Unfollow செய்துள்ளார். முன்னதாக சமந்தா நாகாவுடன் எடுத்த படங்களை தனது சமூக வலைதளங்களில் இருந்து நீக்கிவிட்டார். 

நாக சைதன்யாவை எல்லாத்திலும் UNFOLLOW செய்த SAMANTHA.. திடீர்னு ஏன் இப்படி பண்ணாங்க? வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Samantha Unfollowed Naga Chaitanya in all social media

People looking for online information on Naga chaitanya, Samantha, Samantha ruth prabhu will find this news story useful.