விமான பயணத்தில் நடிகை சமந்தா.. கூட யார்லாம் இருக்காங்க பாருங்க.. வைரல் PICS..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை சமந்தாவின் இன்ஸ்டாகிராம் போஸ்ட் ஒன்று தற்போது ரசிகர்களுக்கு மத்தியில் வைரலாகி வருகிறது.

Advertising
>
Advertising

Images are subject to © copyright to their respective owners.

Also Read | சந்திரமுகி-2 குழுவுடன் ஹோலி கொண்டாடிய நடிகை கங்கனா ரனாவத்.. வைரல் வீடியோ..!

சமந்தா 

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர்‌. விண்ணைத்தாண்டி வருவாயா, நீ தானே என் பொன்வசந்தம் படங்களின் தெலுங்கு உருவாக்கத்தில் நடித்து புகழ்பெற்றார். ரங்கஸ்தலம், சூப்பர் டீலக்ஸ், பேமிலி மேன் 2 இவருக்கு நல்ல பேரை பெற்றுத்தந்தது. கடைசியாக தமிழில் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்து இருந்தார். சமீபத்தில் நடிகை சமந்தா நடித்த யசோதா படம் கடந்த ஆண்டு நவம்பர் 11 ஆம் தேதி வெளியானது. வாடகைத் தாயாக நடிகை சமந்தா இந்த படத்தில் நடித்திருந்தார்.

Images are subject to © copyright to their respective owners.

சாகுந்தலம்

தற்போது சமந்தா கதாநாயகியாக நடிக்க “சாகுந்தலம்” திரைப்படம்  உருவாகி வருகிறது. பான் இந்திய படமாக உருவாகும் இந்த படம் ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதி தெலுங்கு, இந்தி, தமிழ்,மலையாளம் மற்றும் கன்னடம் மொழிகளில் வெளியாக உள்ளது.

Images are subject to © copyright to their respective owners.

சகுந்தலம் திரைப்படத்தை இயக்குனர் குணசேகர் எழுதி இயக்குகிறார். இசையமைப்பாளர் மணிசர்மா இப்படத்திற்கு இசையமைக்கிறார். Gunaa DRP - Teamworks சார்பில் நீலிமா குணா,  இப்படத்தை தயாரிக்கிறார். வாரிசு படத்தின் தயாரிப்பாளர் தில்ராஜு, சகுந்தலம் படத்தை வழங்குகிறார். இந்த படத்தில் மோகன் பாபு, தேவ் மோகன், சச்சின் கெதகர், கௌதமி, அதிதி பாலன் மற்றும் அனன்யா நாகல்லா முக்கிய பாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

Images are subject to © copyright to their respective owners.

விமான பயணம்

இந்த சூழ்நிலையில் நடிகை சமந்தா தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இரு புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அதில் ஃபேமிலிமென், ஃபர்ஸி உள்ளிட்ட வெப் சீரிஸ்களை இயக்கிய ராஜ் மற்றும் டிகே, சமந்தா மற்றும் நடிகர் வருண் தவான் ஆகியோர் விமானத்தில் பயணிக்கின்றனர். ராஜ் மற்றும் டிகே இயக்கும் சிடாடெல் வெப்சீரிஸில் சமந்தா மற்றும் வருண் தவான் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்த சூழ்நிலையில் சமந்தாவின் பதிவு ரசிகர்களுக்கு மத்தியில் வைரலாகி வருகிறது.

Also Read | "பணம் கையில் வந்தால்தான் நிஜம்".. இயக்குநர் செல்வராகவனின் வைரல் போஸ்ட்..!

தொடர்புடைய இணைப்புகள்

Samantha travel with Varun Dhawan Raj and dk pic goes viral

People looking for online information on Raj DK, Samantha, Varun Dhawan will find this news story useful.