2021இல் விவாகரத்து செய்து கொண்ட திரை பிரபலங்கள் !

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சென்னை : தமிழ் திரையுலகில் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய பிரபல ஜோடிகளின் பிரிவுகளை இந்த பதிவில் பார்ப்போம்.

famous cinema celebrities who got divorce in 2021
Advertising
>
Advertising


சமந்தா- நாக சைதன்யா:

                   சமந்தா மற்றும் நாக சைதன்யாவின் காதல் கதை வித்தியாசமானது. இருவரும் "யே மாய சேசவே" என்ற தெலுங்கு படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார்கள். அவர்களது நட்பு காதலாக மாறியது. 2017 ஆம் ஆண்டு இரு குடும்பத்தாரின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.

famous cinema celebrities who got divorce in 2021

பின் கடந்த அக்டோபர் மாதம் இருவரும் பிரிந்ததாக அறிவித்தனர். இதனால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர் ரசிகர்கள். சமந்தாவும் நாகசைதன்யாவும் பிரிந்ததை சமூக வலைதளங்களில் பதிவிட்டு பிரிந்தனர்.

மகள் கொடுத்த அன்பளிப்பு.. நெகிழ்ந்து போன ரோபோ சங்கர்! அப்படி என்ன கொடுத்தாங்கனு பாருங்க!

பாலாஜி மோகன்-அருணா:

                  'வாயை மூடி பேசவும்', மாரி, மாரி 2 போன்ற படங்கள் மூலம் பிரபலமானவர் இயக்குனர் பாலாஜி மோகன். 2012ம் ஆண்டு தனது பள்ளி காலத்தில் இருந்து வந்த நீண்ட நாள் தோழியான அருணாவை திருமணம் செய்து கொண்டார். திருமணத்தின் அடிப்படையில் அவர்களது நட்பு பலனளிக்கவில்லை. அதன் பின் ஒரு வருடம் கழித்து அருணாவை விவாகரத்து செய்வதாக பாலாஜி மோகன் அறிவித்தார்.


டி இமான்- மோனிகா ரிச்சர்ட்:

                 சூப்பர் ஹிட் காதல் பாடல்களை கொடுத்து, தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக இருப்பவர் தான் டி இமான். இவர் தற்போது தனது மனைவி மோனிகா ரிச்சர்ட்டிடமிருந்து விவாகரத்து செய்வதாக அறிவித்தார்.

13 வருட திருமண வாழ்க்கைக்குப் பின் டி இமானும், மோனிகாவும் இருவர் சம்மதத்துடன் விவாகரத்தை முடிவு செய்துள்ளனர்.  இருவருக்கும் பிளெசிகா கேத்தி மற்றும் வெரோனிக்கா டோரதி என்ற இரு மகள்கள் உள்ளனர்.

பாப்கானை கொறித்தபடி பக்கத்துல பார்த்தா.. ஜோடியாக இருந்தது யார் தெரியுமா? செம குஷி!

சுஷ்மிதா சென்- ரோஹ்மன் ஷால்:

                  சுஷ்மிதா சென் சமீபத்தில் தனது காதலர் ரோஹ்மன் ஷாலை பிரிந்ததாக அறிவித்தார். இருவரும் மனதாரவே பிரிந்தனர். இதுகுறித்து சுஷ்மிதா கூறுகையில்," நாங்கள் நண்பர்களாக தொடங்கினோம்" நாங்கள் நண்பர்களாக இருக்கிறோம்! ஆனால் காதல் அப்படியே இருக்கிறது. காதலில் விழுவது அழகானது. ஆனால் ஒரு சில சமயங்களில் தனித்தனி பாதையில் செல்ல வேண்டியிருக்கும்.

சினிமா நட்சத்திரங்களும் மனிதர்கள் தான்.ஆனால் சில சமயங்களில் துரதிஷ்டமான சம்பவங்களையும் சந்திக்கிறார்கள். பிரபலங்களின் காதல் மற்றும் திருமணங்கள் ரசிகர்களால் கொண்டாடப்படுவதால், அவர்களின் பிரிவு மற்றும் விவாகரத்துகள் ரசிகர்களை ஏமாற்றமடையச் செய்கின்றன.

தொடர்புடைய இணைப்புகள்

Famous cinema celebrities who got divorce in 2021

People looking for online information on சமந்தா, நாக சைதன்யா, D Imman, Samantha will find this news story useful.