OSCAR 2022 : வில் ஸ்மித் அடித்தது குறித்து நடிகை சமந்தா போட்ட வைரல் பதிவு!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஆஸ்கர் மேடையில் வில் ஸ்மித் கிறிஸ் ராக்கை அறைந்தது சமூகவலைதளங்களில் விவாதங்களை எழுப்பியுள்ளது. அது பற்றி நடிகை சமந்தா பகிர்ந்துள்ள ஸ்டேட்டஸ் கவனத்தை ஈர்த்துள்ளது.

Advertising
>
Advertising

”ராக்கிக்கு Records பிடிக்காது… ஆனா…?” – 24 மணிநேரத்தில் KGF 2 டிரைலர் படைத்த இமாலய சாதனை!

பாடிஷேமிங் நகைச்சுவை..

நேற்று நடந்த 94 ஆவது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழாவில் நடந்த நிகழ்ச்சி ஒன்று நடந்து உலகளவில் கவனத்தைப் பெற்றது. சிறந்த ஆவணப்படத்துக்கான விருதை அறிவிக்க வந்த நடிகர் கிறிஸ் ராக் மேடையில் வில் ஸ்மித்தின் மனைவி ஜேடா பின்கெட் ஸ்மித்தின் தலைமுடிப் பற்றிய ஒரு ஜோக்கை கூறினார் (ஒரு உடல்நலப் பிரச்சனைக் காரணமாக பிங்கெட்டின் தலைமுடி சமீபகாலமாக உதிர்ந்துவருவதால் அவர் மொட்டை அடித்திருந்தார்). இதை முன் வரிசையில் அமர்ந்திருந்த வில் ஸ்மித் தம்பதிகள் ரசிக்கவில்லை.

எல்லைத் தாண்டிய வில் ஸ்மித்….

இதனால் கோபமான வில் ஸ்மித் மேடையில் ஆவேசாமாக ஏறிச் சென்று கிறிஸ் ராக்கை பளார் என அறைந்தார். பின்னர் கோபமாக ‘என் மனைவியின் பெயரை சொல்வதை நிறுத்துங்கள்’ எனக் கத்திவிட்டு தனது இருக்கைக்கு சென்றார். வில் ஸ்மித்தின் இந்த கோபமான செய்கையால் ஆஸ்கர் மேடை பரபரப்பாகி அங்கு சில நொடிகள் தர்மசங்கடமான நிலை ஏற்பட்டது. அதன் பின்னர் மேடையில் இருந்த கிறிஸ் ராக் ‘இது தொலைக்காட்சி வரலாற்றின் முக்கியமான இரவுகளில் ஒன்றாக இருக்கும்’ எனக் கூறி சமாளித்தார்.

வில் ஸ்மித்தின் மன்னிப்பு…

இந்த சம்பவம் உலகளவில் பல விவாதங்களை எழுப்பியுள்ள நிலையில் தற்போது வில் ஸ்மித் தனது செயலுக்காக வருத்தம் தெரிவித்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் ‘ வன்முறை என்பது எந்த  வடிவில் இருந்தாலும் விஷமானது மற்றும் அழிவுகரமானது. நேற்றிரவு நடந்த அகாடமி விருதுகளில் எனது செயல் ஏற்றுக்கொள்ள முடியாதது மற்றும் மன்னிக்க முடியாதது. நகைச்சுவைகள் வேலையின் ஒரு பகுதியாகும், ஆனால் ஜடாவின் உடல்நிலை குறித்த நகைச்சுவை என்னால் தாங்க முடியாத அளவுக்கு இருந்தது. அதற்கு நான் உணர்ச்சிவசப்பட்டு பதிலளித்தேன்.

கிறிஸ் ,நான் உங்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க விரும்புகிறேன். நான் எல்லையைத் தாண்டிவிட்டேன். நான் செய்த தவறுக்காக வெட்கப்படுகிறேன். அன்பும் கருணையும் நிறைந்த உலகில் வன்முறைக்கு இடமில்லை. அகாடமி, நிகழ்ச்சியின் தயாரிப்பாளர்கள், பங்கேற்பாளர்கள் மற்றும் உலகம் முழுவதும் இதைப் பார்த்த அனைவரிடமும் மன்னிப்பு கேட்க விரும்புகிறேன். வில்லியம்ஸ் குடும்பத்தினரிடமும் எனது கிங் ரிச்சர்ட்(இந்த படத்துக்காகதான் ஆஸ்கர் விருதை வென்றார் வில்) குடும்பத்தினரிடமும் மன்னிப்பு கேட்க விரும்புகிறேன். நம் அனைவருக்கும் ஒரு அழகான நிகழ்வாக இருந்ததை எனது நடத்தை கறைபடுத்தியதற்கு நான் ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.’ எனக் கூறியுள்ளார்.

சமந்தாவின் வைரல் பதிவு….

இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக நடிகை சமந்தா தன்னுடைய கருத்துகளைப் பகிர்ந்துள்ளார். அதில் ‘இணையம் இப்போது சரி தவறு என்று இரண்டாக பிளவுபட்டுள்ளது. ஆனால் உண்மையான விடை என்பது நகைச்சுவை மற்றும் ஆண்மை ஆகியவற்றை புரிந்துகொள்வதாகும். யாராக இருந்தாலும், ஒருவரை உடல் ரீதியாக தாக்குதல் செய்து அதை நகைச்சுவை என்று சொல்லக் கூடாது. ஆனால் அதற்கு உடல் ரீதியான தாக்குதல்தான் சரியான பதிலா? எந்த தவறாக இருந்தாலும் தாக்குதல் சரியானது இல்லை. அதற்கு பதிலாக வில் ஸ்மித் வார்த்தைகளால் அதை எதிர்கொண்டிருக்கலாம், அல்லது தனிப்பட்ட முறையில் கிறிஸ் ராக்கிடம் பேசி இருக்கலாம். அல்லது ஆஸ்கர் மேடையைப் பயன்படுத்தி இது தன் மனைவியை எப்படி காயப்படுத்தும் என சொல்லி இருக்கலாம்’ என பல ஸ்டேட்டஸ்களைப் பகிர்ந்துள்ளார். இந்த பதிவுகள் இப்போது இணையத்தில் கவனத்த இ ஈர்த்து வருகின்றன.

விட்டுட்டு போயிட்டேனாம்... அதான் இவ்ளோ ட்ராமா” வரலட்சுமி பகிர்ந்த cute வீடியோ!

தொடர்புடைய இணைப்புகள்

Samantha statement on will smith action in Oscar 2022

People looking for online information on Oscar 2022, Samantha, Samantha statement on will smith action, Will Smith will find this news story useful.