தில் ராஜூ வெளியிடும் சமந்தாவின் PAN INDIA படம்.. ரிலீஸ் எப்போ?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை சமந்தா நடிக்கும் புதிய PAN INDIA திரைப்படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகி உள்ளது.

Advertising
>
Advertising

Also Read | LOVE TODAY படத்தின் இந்தி ரீமேக் ரைட்ஸ்.. தயாரிப்பாளர் போனி கபூர் போட்ட பரபர ட்வீட்!

சமந்தா  தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர்‌ விண்ணைத்தாண்டி வருவாயா, நீ தானே என் பொன்வசந்தம் படங்களின் தெலுங்கு உருவாக்கத்தில் நடித்து புகழ்பெற்றார். 

சமீபத்தில் ரங்கஸ்தலம், சூப்பர் டீலக்ஸ், பேமிலி மேன் 2 இவருக்கு நல்ல பேரை பெற்றுத்தந்தது. கடைசியாக தமிழில் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்து இருந்தார்.

சமந்தா, தெலுங்கில் ‘ஷகுந்தலம்’ 'யசோதா', "குஷி' படங்களில் தற்போது நடித்து வருகிறார்.  நடிகை டாப்ஸியின் அவுட்சைடர்ஸ் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் ஒரு புதிய படத்தின் மூலம் பாலிவுட்டிலும் அறிமுகமாகிறார் நடிகை சமந்தா.

சமீபத்தில் நடிகை சமந்தா நடித்த யசோதா படம் கடந்த நவம்பர் 11 ஆம் தேதி வெளியானது. வாடகைத் தாயாக நடிகை சமந்தா இந்த படத்தில் நடித்திருந்தார்.

தற்போது சமந்தா கதாநாயகியாக நடிக்க “சகுந்தலம்” திரைப்படம்  உருவாகி வருகிறது. பான் இந்திய படமாக உருவாகும் இந்த படம் தெலுங்கு, இந்தி, தமிழ்,மலையாளம் மற்றும் கன்னடம் மொழிகளில் வெளியாக உள்ளது.

சகுந்தலம் திரைப்படத்தை இயக்குனர் குணசேகர் எழுதி இயக்குகிறார்.இசையமைப்பாளர் மணிசர்மா இப்படத்திற்கு இசையமைக்க, சேகர்  V ஜோசப் ஒளிப்பதிவு செய்கிறார், சாய் மாதவ் புர்ரா வசனம் எழுதுகிறார்.

Gunaa DRP - Teamworks சார்பில் நீலிமா குணா,  இப்படத்தை தயாரிக்கிறார்.  வாரிசு படத்தின் தயாரிப்பாளர் தில்ராஜு, சகுந்தலம் படத்தை வழங்குகிறார்.

இந்த படத்தில் மோகன் பாபு, தேவ் மோகன், சச்சின் கெதகர், கௌதமி, அதிதி பாலன் மற்றும் அனன்யா நாகல்லா முக்கிய பாத்திரங்களில் நடிக்கிறார்கள். மேலும்
பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜீனின் மகள் அல்லு அர்ஹா  இந்த படத்தில் அறிமுகமாக உள்ளார்.

இந்நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி புதிய போஸ்டர் மூலம் அறிவித்துள்ளது. பிப்ரவரி மாதம் 17 ஆம் தேதி திரையரங்குகளில் தெலுங்கு, இந்தி, தமிழ்,மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய 5 மொழிகளில் வெளியாக உள்ளது.

Also Read | "வானம் கூட எல்லை இல்லை".. மகள் பிறந்தாளுக்கு நடிகை மீனா நெகிழ்ச்சியான பதிவு!

தொடர்புடைய இணைப்புகள்

Samantha Shaakunthalam Movie Release Date Announced

People looking for online information on Samantha ruth prabhu, Shaakunthalam, Shaakunthalam Movie Update will find this news story useful.