வாடகைத் தாயாக சமந்தா நடிக்கும் 'யசோதா' .. வெளியான மிரட்டலான டிரெய்லர்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சமந்தா நடிக்கும் 'யசோதா' படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.

Advertising
>
Advertising

Also Read | கமல் & லோகேஷ் பங்கேற்கும் 'விக்ரம்' 100-வது நாள் வெற்றி விழா.. எங்கே? எப்போ?

தமிழ் தெலுங்கு திரையுலகில் முன்ணனி நாயகியாக வலம் வரும் நடிகை சமந்தா,   “ஃபேமிலிமேன் 2” தொடர் மூலம் இந்திய அளவில் முன்னணி நடிகையாக,  நட்சத்திர அந்தஸ்தை அடைந்துள்ளார்.

நடிகை சமந்தா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் ‘யசோதா’ திரைப்படத்தினை Sridevi Movies  சார்பில்  சிவலெங்கா கிருஷ்ண பிரசாத் தயாரிக்கிறார். ஹரி-ஹரீஷ் கூட்டணி இப்படத்தில் இயக்குனர்களாக அறிமுகமாகிறார்கள். Sridevi Movies தயாரிப்பு நிறுவனம் 'யசோதா' படத்தை தங்களின் 14வது தயாரிப்பாக உருவாக்கி வருகிறது.

இந்தப் படத்தில், பிரபல நடிகர்களான வரலட்சுமி சரத்குமார், உன்னி முகுந்தன், ராவ் ரமேஷ், முரளி சர்மா, சம்பத் ராஜ், பிரியங்கா சர்மா மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

தெலுங்கு, தமிழ், ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் இந்த படம் நவம்பர் மாதம் 11 ஆம் தேதி வெளியாக உள்ளது.

ஏற்கனவே இந்த படத்தின் டீஸர் வெளியாகி உள்ளது. இந்நிலையில் இன்று இந்த படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது. வாடகைத் தாயாக நடிகை சமந்தா டிரெய்லரில் தோன்றியுள்ளார். சமந்தா எதிர்கொள்ளும் பிரச்சினைகளை மையமாக வைத்து த்ரில்லர் வகைமையில் டிரெய்லர் அமைந்துள்ளது.

 

Also Read | குடும்பத்துடன் நடிகை ஸ்ரேயாவின் தீபாவளி போட்டோஷூட்.. ரசிகர்களை கவரும் சூப்பர் ஃபோட்டோஸ்!

தொடர்புடைய இணைப்புகள்

Samantha Ruth Prabhu Starring Yashoda Movie Official Trailer

People looking for online information on Samantha ruth prabhu, Samantha Yashoda Movie, Yashoda Trailer will find this news story useful.