சமந்தா நடிக்கும் PAN INDIA புராணத் திரைப்படம்.. ரிலீஸ் எப்போ? சூப்பர் போஸ்டருடன் வெளியான அப்டேட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை சமந்தா நடிக்கும் புதிய பான் இந்திய புராண படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertising
>
Advertising

Also Read | துபாயில் சொந்தக்கார குழந்தைகளுடன் விளையாடிய விக்கி & நயன்தாரா! இணையத்தை கலக்கும் செம PHOTOS

சமந்தா முதன்மை பாத்திரத்தில் நடிக்கும் “சகுந்தலம்” திரைப்படம்  உருவாகி வருகிறது. பன்மொழி படைப்பாக உருவாகும் இப்படம் தெலுங்கு இந்தி, தமிழ்,மலையாளம் மற்றும் கன்னடம் மொழிகளில் உருவாகிறது.

சகுந்தலம் திரைப்படத்தை இயக்குநர் குணசேகர் எழுதி இயக்குகிறார், மணிசர்மா இப்படத்திற்கு இசையமைக்க, சேகர்  V ஜோசப் ஒளிப்பதிவு செய்கிறார், சாய் மாதவ் புர்ரா வசனம் எழுதுகிறார்.

பிரபல நடிகர் அல்லு அர்ஜீன் மகள் அல்லு அர்ஹா  அறிமுகம் ஆகும் இப்படத்தில்,  மோகன் பாபு, தேவ் மோகன், சச்சின் கெதகர், கௌதமி, அதிதி பாலன் மற்றும் அனன்யா நாகல்லா முக்கிய பாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

Gunaa DRP - Teamworks சார்பில் நீலிமா குணா,  இப்படத்தை தயாரிக்கிறார். பிரபல தயாரிப்பாளர் தில்ராஜு, சகுந்தலம் படத்தை வழங்குகிறார்.

தற்போது இப்படத்தின் தயாரிப்பாளர்கள் சகுந்தலம் படத்தில் ரிலீஸ் தேதியை வெளியிட்டுள்ளனர். இந்த படம் வரும் நவம்பர் மாதம் 4 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக பிரத்யேக போஸ்டருடன் படநிறுவனம் அறிவித்துள்ளது.

Also Read | "விக்ரம் & ஜெயம் ரவிக்கு ஜோடியா நடிச்சுட்டு.. இப்போ அக்கா தங்கையா".. மனம் திறந்த த்ரிஷா!

சமந்தா நடிக்கும் PAN INDIA புராணத் திரைப்படம்.. ரிலீஸ் எப்போ? சூப்பர் போஸ்டருடன் வெளியான அப்டேட்! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Samantha Ruth Prabhu Shaakunthalam Movie Release Date

People looking for online information on Samantha ruth prabhu, Shaakunthalam Movie, Shaakunthalam Movie release updates will find this news story useful.