'RRR' ஆலியா பட் நடிப்பில் வெளியான புதிய படம்! வைரலான நடிகை சமந்தா கொடுத்த சூப்பர் விமர்சனம்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மும்பை: ஆலியாபட் நடிப்பில் வெளியான கங்குபாய் கத்தியவாடி படத்தினை நடிகை சமந்தா திரை விமர்சனம் செய்துள்ளார்.

Advertising
>
Advertising

RRR படத்திற்கு பின் இந்த கங்குபாய் கதியாவாடி படத்தில் ஆலியா பட் நடித்துள்ளார். சஞ்சய் லீலா பன்சாலி மற்றும் ஜெயந்திலால் கடா ஆகியோரால் தயாரிக்கப்பட்டு சஞ்சய் லீலா பன்சாலி இயக்கி உள்ளார். பயோகிராபி கிரைம் டிராமாவாக இந்த படம் உருவாகி உள்ளது. இந்த படம் ஹுசைன் ஜைதியின் "மும்பையின் மாஃபியா குயின்ஸ்" என்ற புத்தகத்தின் ஒரு அத்தியாயத்திலிருந்து தழுவி எடுக்கப்பட்டுள்ளது.

கத்தியவாடியின் எளிய பெண்ணான கங்கா ஹர்ஜிவந்தஸ், காமாதிபுராவின் சிவப்பு விளக்குப் பகுதியில் மிகப்பெரிய டானாக  கங்குபாய் எப்படி மாறுகிறாள் என்பதே படத்தின் கதை. 'கங்குபாய் கோதேவாலி என்ற இளம்பெண்ணை விபச்சாரத்திற்கு விற்பது முதல் பின் அவள் எப்படி காமாதிபுராவில் உள்ள ஒரு விபச்சார விடுதியின் மேடமாக மாறுகிறாள் என்பது வரை' படம் பேசி உள்ளது.

ஆலியா பட் நடித்த கங்குபாய் கத்தியவாடி திரைப்படம் பிப்ரவரி 25, வெள்ளிக்கிழமை அன்று திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. இந்த படம் முதலில் 11 செப்டம்பர் 2020 அன்று திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டது, பின்னர் 30 ஜூலை 2021 அன்று வெளியிட திட்டமிடப்பட்டது, அதன் பிறகு இந்தியாவில் கோவிட்-19 தொற்று நோய் காரணமாக கங்குபாய் கத்தியவாடி பலமுறை ஒத்திவைக்கப்பட்டது.

இப்படம் 2022 பிப்ரவரி 10 முதல் 20 வரை நடைபெறவிருக்கும் 72வது பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. இந்நிலையில் இந்த படத்தை பார்த்த நடிகை சமந்தா படம் பற்றி விமர்சனத்தை இன்ஸ்டாகிராமில் கூறியுள்ளார். அதில்,"கங்குபாய் கத்தியவாடி ஒரு தலைசிறந்த படைப்பு!! ஆலியாபட், உங்கள் நடிப்பை விவரிக்க வார்த்தைகள் போதாது. ஒவ்வொரு உரையாடலும், முக வெளிப்பாடும் என் மனதில் என்றென்றும் நிலைத்திருக்கும்." என கூறியுள்ளார். 

இந்த கங்குபாய் கதியாவாடி படத்தில் சாந்தனு மகேஸ்வரி, விஜய் ராஸ், சீமா பார்கவா பஹ்வா, இந்திரா திவாரி மற்றும் வருண் கபூர் ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர், அஜய் தேவ்கன், ஹுமா குரேஷி மற்றும் இம்ரான் ஹாஷ்மி ஆகியோர் சிறப்பு கேமியோக்களில் நடித்துள்ளனர்.

தொடர்புடைய இணைப்புகள்

Samantha Ruth Prabhu review about Alia Bhatt Gangubai Kathiawadi

People looking for online information on Alia Bhatt, Samantha will find this news story useful.