"உடலினை உறுதிச் செய்".. சமந்தாவின் வெறித்தனமான உடற்பயிற்சி.. இணையத்தை கலக்கும் வைரல் போட்டோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சமந்தா  தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர்‌.

Advertising
>
Advertising

Images are subject to © copyright to their respective owners.

Also Read | "LOVE அதானே எல்லாம்".. நயன்தாரா & குழந்தைகளுடன் விக்னேஷ் சிவன்! வைரல் பதிவு

விண்ணைத்தாண்டி வருவாயா, நீ தானே என் பொன்வசந்தம் படங்களின் தெலுங்கு உருவாக்கத்தில் நடித்து புகழ்பெற்றவர்.

ரங்கஸ்தலம், சூப்பர் டீலக்ஸ், பேமிலி மேன் 2 இவருக்கு நல்ல பேரை பெற்றுத்தந்தது. கடைசியாக தமிழில் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்து இருந்தார். 

நடிகை சமந்தா நடித்த யசோதா படம் தெலுங்கில் உருவாகி கடந்த ஆண்டு நவம்பர் 11 ஆம் தேதி வெளியானது. வாடகைத் தாயாக நடிகை சமந்தா இந்த படத்தில் நடித்திருந்தார்.

Images are subject to © copyright to their respective owners.

சமீபத்தில் நடிகை சமந்தா பழனி முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்துள்ளார். படிக்கட்டுகளில் ஏறி சூடம் மற்றும் விளக்கு ஏற்றி வழிபாடு செய்தார்.

தற்போது சமந்தா கதாநாயகியாக நடித்துள்ள “சகுந்தலம்” திரைப்படம்  வரும் ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதி தெலுங்கு, இந்தி, தமிழ்,மலையாளம் மற்றும் கன்னடம் மொழிகளில் வெளியாக உள்ளது.

Images are subject to © copyright to their respective owners.

இந்த படத்தில் மோகன் பாபு, தேவ் மோகன், சச்சின் கெதகர், கௌதமி, அதிதி பாலன் மற்றும் அனன்யா நாகல்லா முக்கிய பாத்திரங்களில் நடிக்கிறார்கள். நடிகர் அல்லு அர்ஜீனின் மகள் அல்லு அர்ஹா  இந்த படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகிறார்.

Images are subject to © copyright to their respective owners.

சகுந்தலம் திரைப்படத்தை இயக்குனர் குணசேகர் எழுதி இயக்குகிறார். இசையமைப்பாளர் மணிசர்மா இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

Images are subject to © copyright to their respective owners.

இந்நிலையில் நடிகை சமந்தா தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உடற்பயிற்சி செய்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். கார்டியோ உடற்பயிற்சி & யோகா செய்வது போல இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

Also Read | SURIYA 42 டைட்டில், டீஸர் & ரிலீஸ் தேதி அறிவிப்பு எப்போ? தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா EXCLUSIVE! போடு வெடிய

தொடர்புடைய இணைப்புகள்

Samantha Ruth Prabhu New Gym Work out Photo

People looking for online information on Samantha Gym Work out Photo, Samantha ruth prabhu will find this news story useful.