நடிகை சமந்தா உடற்பயிற்சியில் ஈடுபட்டுள்ள போட்டோவை இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் வெளியிட்டுள்ளார்.
Also Read | இந்த வருசம் 'விக்ரம்' தான் நம்பர் ஒன்.. வெளிவந்த USA ஃபாக்ஸ் ஆபிஸ் வசூல்!
சமந்தா (Samantha) கடைசியாக காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் கதிஜா எனும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
சமந்தாவுக்கு ரங்கஸ்தலம், சூப்பர் டீலக்ஸ், பேமிலி மேன் 2 ஆகிய படங்கள் நல்ல பேரை பெற்றுத்தந்தது.
சமந்தா, தற்போது தமிழில் இயக்குனர் சாந்தரூபன் ஞானசேகரன் இயக்கத்தில் ட்ரீம் வாரியர்ஸ் தயாரிக்கும் புதிய படம், தெலுங்கில் ‘ஷகுந்தலம்’ 'யசோதா' படங்களில் நடித்து வருகிறார்.
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக சமந்தா, வீடியோக்கள், கிளாமர் புகைப்படங்களை பதிவேற்றுவார். மேலும் ரசிகர்களுடனும் கேள்வி பதில் கலந்துரையாடல் செய்வார்.
இந்நிலையில் டம்பூள்ஸ் எடை தூக்கும் உடற்பயிற்சி செய்யும் போட்டோவை இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் வெளியிட்டுள்ளார். அதில், Rise and Shine என கேப்சன் போட்டுள்ளார்.
சமீபத்தில் சமந்தாவின் போட்டோ ஷூட் புகைப்படங்கள் வைரல் ஆனது குறிப்பிடத்தக்கது.
Also Read | விக்ரம் படத்தின் ஏஜெண்ட் டீனா.. நடிகை வசந்திக்கு ஷூட்டிங் ஸ்பாட்டில் பாராட்டு விழா!